மேற்கு ஆசிய போர் தொடர்பாக விவாதிக்க மோடி அரசு மறுப்பு
புதுதில்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்களன்று மீண்டும் தொடங்கி யது. இது இரண்டாவது அமர்வு ஆகும். முதல் அமர்வு பிப்., 1ஆம் தேதி தொடங்கி பிப்., 11 வரை நடைபெற்ற நிலையில், இரண்டா வது அமர்வு திங்களன்று தொடங்கி ஏப்ரல் 2 வரை நடைபெறவுள்ளது. மாநிலங்களவை இந்நிலையில், மாநிலங்களவையில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்கா வின் தாக்குதல் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வலியுறுத்துவதாக அதில் ஜெய்சங்கர் குறிப்பிட்டிருந்தார். அப்போது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,”மேற்கு ஆசியாவின் புவிசார் நிலைமை காரணமாக இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிகப் பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விவ காரம் குறித்து குறுகிய விவாதம் நடத்த அனு மதிக்க வேண்டும். இந்த மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள் ளது. வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தி யர்கள் வசிக்கிறார்கள். எனவே, இதில் அவர்க ளின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அடங்கி இருக்கிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து விதி எண் 176இன் கீழ் விவாதம் நடத்தப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். அனுமதி மறுப்பு இதற்கு அனுமதி மறுத்த அவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்,”இது குறித்து விவாதித்து முடிவெடுக்கலாம். இப்போது இதற்கு அனுமதி அளிக்க முடியாது” என்று கூறி, இந்த விவகா ரம் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது அறிக்கையை அளிக்க அனுமதி அளித் தார். ஆனால், ஈரான் யுத்தம் தொடர்பாக விவா திக்க வேண்டும்; ஈரான் யுத்தத்தால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களை மீட்க எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தொடர்ந்து முழக்கங்களை எழுப்பின. ஆனால் அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து தனது உரையை வாசித்தார். இத னால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை காலை 11 மணிக்குக் கூடிய மக்களவை மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நண்பகல் 12 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் மக்களவை 12 மணிக்குக் கூடியது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி யில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற தற்கு ஜெகதாம்பிகா பால் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கேள்வி - நேரம் தொடங்கப்பட்டது. மேற்கு ஆசிய போர் குறித்து விவாதம் நடத்தப் பட வேண்டும் என்று வலியுறுத்தி ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.,க்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மேற்கு ஆசிய போர் குறித்த அறிக்கையை அளிக்க வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஜெகதாம்பிகா பால் அனுமதி அளித்தார். அப்போது ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.,க்கள், விவாதம் வேண்டும், விவாதம் வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஒன்றிய அமைச்சரின் உரையைத் தவிர வேறு எந்த முக்கிய விவாதமும் நடைபெறாமல் மக்களவை நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
சபாநாயகர் பதவிநீக்க தீர்மானம்: இன்று விவாதம்
இதனிடையே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தின் மீது செவ்வாய்க்கிழமை முதல் மக்களவையில் 10 மணி நேர விவாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கி வைக்க உள்ளார். இந்த விவாதம் 2 நாள் நடை பெறும். ஒவ்வொரு நாளும் 5 மணிநேரம் விவாதம் நடைபெறும். இந்த விவாதங்களின் முடிவில், ஓம் பிர்லாவை பதவி நீக்க கோரும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
