states

img

விவசாயத்தை அழிக்கும் மோடி அரசின் ஒப்பந்தம் - கே.பி.பெருமாள்

இந்திய அரசு பல்வேறு நாடுகளுடன் பல  ஒப்பந்தங்களை போட்டுள்ளது. அதே  போல் உலக வர்த்தக அமைப்பிலும் இணைந்துள் ளது. இதன் சார்பிலும் உலக வணிக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட்டிருக்கும் ஒரு நாடு விரும்பினால் சில பொருட்களின் ஏற்று மதிக்கு தடை, இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்க லாம். ஒவ்வொரு நாடும் நமது இறையாண்மை யைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வழிவகை களும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளது. ஆனால் கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி மோடி அரசு “வரியற்ற  தடையில்லா வணிக ஒப்பந்தம்” என்ற ஒப்பந்தத் தில் நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல் 2024 மார்ச் 10ல் யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக கையெழுத்திட்டிருக்கிறது. 1995ஆம் ஆண்டு உலக வர்த்தக  அமைப்பு உருவான போது புதிது புதிதாக ரீல் விட்டார்கள். அம்பாசமுத்திரத்தில் விளைந்த வாழைக்காயை அமெரிக்காவில் விற்கலாம்; டாலரில் பணம் குவிக்கலாம் என்றார்கள். ஆனால் இப்போது கர்நாடகாவையே தாண்ட முடியவில்லை. உலக வர்த்தக அமைப்பு என்கிற பெயரில் வளர்ந்த நாடுகள் பலவும், வளரும் நாடுகள் மீது காட்டும் ஏகப்பட்ட கெடுபிடிகளை எதிர்த்து, உலக வர்த்தக அமைப்பின் ஒவ்வொரு மாநாட்டிலும் உலக நாடுகளின் தலைவர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்புகின்றனர். அதைத் தொடர்ந்து உருவாகும் சலசலப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. இறுதியில் ஏதோ ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு கூட்டத்தை முடித்துக் கொள்வார்கள். 

தோகா சுற்று பேச்சுவார்த்தைகள்

2001ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் விவசாயி கள் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இறுதி யில் வளர்ந்த நாடுகள் “விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் மானியங்கள் நிறுத்தப்படும் வரை” விவசாயத்தை உலக வர்த்தக அமைப்பில் சேர்க்கக் கூடாது என்று முடிவு செய்தார்கள். பல விதமான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒப்பந்தமே உலக நாடுகளை ஆட்டுவிக்கும் போது எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுடன் “வரியில்லா தடையற்ற வணிக ஒப்பந்தம்” போட்டால் இந்தியா என்கிற நாடு எவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பதை எல்லாம் மனதில் கொள்ளாமல் மோடி அரசு 2024 மார்ச்சில் ஒப்பந்தம் போட்டுள்ளது. ‘வரியில்லா தடையற்ற வணிகம்’ நடை முறைப்படுத்தப்பட்டால் ஆரம்பத்தில் சில ஆண்டு களுக்கு பளபளப்பாக ஜொலிக்கின்ற மாதிரி தான் தெரியும். வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு உற்பத்திப் பொருட்களை குவித்து ஆச்சரிய மூட்டுவார்கள். ஐரோப்பிய நாடுகளிலிருந்து பால் பொருட்களும், விவசாய விளை பொருட்களும், ஜப்பான், கொரியா விலிருந்து ஆலை உற்பத்தி பொருட்களும் இந்திய சந்தையை குறிவைத்து குவியும். சுதாரித்து எழுவதற்குள் இந்திய விவசாயிகள் காணாமல் போய்விடுவார்கள்.  இப்படி ஒரு மோசமான ஒப்பந்தத்தைப் போட்டு விட்டு  “இது ஒரு வரலாற்று சாதனை; வணிக  திருப்பு முனை” என்று வாய் கிழியப் பேசிவரு கிறார் பிரதமர் மோடி. முன்பு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ‘இந்தியா ஒளிக்கிறது’ என்று கூவி னார்கள். ஆனால் வாஜ்பாய் அரசை மக்கள் ஒழித்துக் கட்டினார்கள். இது புரியாமல் பிரதமர் மோடி கேரண்டி... வாரண்டி என்று கூவிக் கொண்டி ருக்கிறார்.

வரியில்லா தடையற்ற ஒப்பந்தத்தில் கையெழு த்திட்டுள்ள இ.எப்.டி.ஏ எனும் கூட்டமைப்பில் பங்கு வகிக்கக்கூடிய சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லிக்கன்ஸ்டைன் ஆகிய நான்கு நாடுகளுடைய மக்கள் தொகை 1.5 கோடி தான். ஆனால், இந்திய மக்கள் தொகை 140 கோடி. இந்திய மக்கள் சந்தையை குறிவைத்தே வளர்ந்த நாடுகள், இந்திய பொருளாதாரத்தை சிதைக்க முயற்சி செய்கின்றன. இப்போது இந்த நாடுகளுடன் போடப்பட்டிருக்கும் வரியில்லா தடையற்ற வணிக ஒப்பந்தம் என்பது ஒரு சிறிய  காட்டாற்று வெள்ளம். இதுவே நாளைக்கு இந்தியா வை மூழ்கடிக்கும் பெரு வெள்ளமாக மாறக் கூடிய அபாயம் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. திருவாளர் மோடி அவர்களே, 2020ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு எதிராக மூன்று  வேளாண்சட்டங்களை எவ்வித விவாதமும் இல்லா மல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினீர்கள். அந்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் இந்தியா வில் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளிடம் விவ சாயமே இருக்காது என்று நாடு முழுவதும் விவ சாயிகள் மிகப்பெரும் போராட்டங்களை நடத்தி னார்கள். இறுதியாக 720க்கும் அதிகமான விவ சாயிகளை உயிர்ப்பலி கொடுத்து 16 மாத காலம் போராட்டம் நடத்தி மூன்று வேளாண் சட்டங்களை யும் திரும்பப் பெற வைத்தனர். மோடி அரசு விவ சாயிகளுடன் ஓர் ஒப்பந்தம் போட்டது. அந்த  ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த கோரிக்கை யையும் இன்றுவரை நிறைவேற்றவில்லை. நீங்கள் போட்ட ஒப்பந்தத்தையே நிறைவேற்றா தவர்கள் என்பதை இந்த நாட்டு மக்கள் அறி வார்கள். இவ்வாறு இருக்க நீங்கள் ஐரோப்பிய நாடு களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளீர்கள். இந்த ஒப்பந்தம் விவசாயிகளையும், இந்திய பொரு ளாதாரத்தையும் பாதிக்கும் என்பதை தாங்கள் அறியாதது அல்ல. இப்போதும் விவசாயி களை பழிவாங்கும் நடவடிக்கையே இந்த ஒப்பந்தம் என்பதை விவசாயிகள் நன்கு அறிவார்கள். விவசாயிகளுக்கும், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும் எதிராக எந்தவொரு ஆட்சியாளர் கள் செயல்பட்டாலும் அவர்களுக்கு வரலாறு பாடம் புகட்டும். 
 

;