states

img

எங்கும் மோடி எதிலும் மோடி

எல்லா இடத்திலும் மோடி இருக்கிறார். துடைப்பத்தை பிடித்தவாறு எங்கு நோக்கினும்  மோடியின் கட் அவுட்டுகள்! குறிப்பாக யாரையும் பார்க்காது கையசைக்கிறார். பெட்ரோல் நிலையம், விமான நிலையம், அரசு நிறுவனங்கள் ,ரயில் சந்திப்புகள் எல்லா இடங்களிலும்  மோடியின் முப்பரிமாண ஆளுயர 3டி செல்பி பாயிண்ட்டுகள் நிறைந்துள்ளன.ஒரு ‘3டி’ செல்பி பாயிண்ட் உருவாக்க ரூ.6.25 லட்சம் செலவாம். தகவல்  அறியும் உரிமைச் சட்டத்தில் பதிலளித்த அதிகாரி மறுநாளே மாற்றப்படுகிறார். அரசின் திட்டங்கள் எல்லாம் மோடி என்ற தனி மனிதனின் திட்டங்களாக காட்டப்படுகின்றன. கொரோனா தடுப்பூசி சான்றிதழிலும் மோடியின் படம் தான்! இந்தியா முழுவதும் மோடியின் படங்கள் நிறைந்து வழிந்தாலும், தான் மக்களால் மறக்கப்படலாம், எனவே தன்னை மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று அஞ்சுகிறார். மோடி பிரதமர் ஆனதிலிருந்து மோடி மீதான தனிநபர் வழிபாடு இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க அம்சமாக மாறிவிட்டது. வெகுமக்கள் ஊடகங்கள் தேசியவாதம், மதம், அரசியலை மையமாகக் கொண்டு மூர்க்கத்தனமாக மோடியின் பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.

நேருவுக்கு அணைகளே கோவில்கள் மோடிக்கு கோவில்களே அணைகள்

இது மனிதனைக் கடவுளாக்கும் காலம். அவரது பாரதிய ஜனதா கட்சியினர் மோடியை விஷ்ணுவின் அவதாரமா கப் போற்றுகின்றனர். ராமர் சிலையை நிறுவும் விழாவில், கைவிடப்பட்டிருந்த ராமரை அவரது பிறந்த இடத்திற்கு மோடி திரும்ப அழைத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. மோடி தனது உரை யில் கூடாரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ராமரை பக்கா வீட்டில்  அவரது பிறந்த இடத்தில் கோவில் கட்டி குடியமர்த்தி உள்ளதா கத் தெரிவிக்கிறார். நேருவுக்கு அணைகளே கோவில்கள். மோடிக்கு கோவில்களே வளர்ச்சிக்கான அணைகளாக உள்ளன.மத நிறுவனங்களால் நியமிக்கப்படாத அர்ச்ச கராக மோடி ராமர் சிலையை நிறுவிச் சடங்குகளை செய்கிறார். அவரது கட்சி தலைவர்களும் பாலிவுட் நட்சத்திரங்களும் ஆரவாரம் செய்கின்றனர். இந்து மதம் என்பது இப்போது அயோத்தி ராமர் கோயிலை சுற்றியே கற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாடு, ஒரே சந்தை,  ஒரே தலைவர் என்ற திசை வழியில் நாடு நகர்த்தப்படுகிறது. எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியல்  செய்வதாகக் குற்றம் சாட்டிக் கொண்டே, மடாதிபதி போன்ற ஒரே தலைவர் என்ற  சர்வாதிகாரத்தை  நோக்கி நாடு பலவந்தமாக செலுத்தப்படுகிறது. முடியாட்சி மன்னர்களின் முடி சூட்டும் விழாவை நினைவு படுத்தும் விதமாக புதிய நாடாளுமன்றத்தில், முடியாட்சி மன்னர்க ளுக்கும், துறவிகளுக்கும் உரிய செங்கோலை ஏந்தி வருகிறார். இந்தியாவில் இப்போது எல்லாமே அடையாள அரசியல் தான்! இன்று மோடியின் பிம்பம் அவரது பாஜக கட்சியையும் விஞ்சி விட்டது.

மீடியாக்களால்  முற்றுகையிடப்படும் இந்தியர்கள்

மோடி பறவைகளைக் கொஞ்சுகிறார். கடலுக்குள் குதிக்கிறார். காட்டுக்குள் வாழ்கிறார். குகைக்குள் தியானம் செய்கிறார். பூஜை புனஸ்காரங்க ளைச் செய்கிறார்.  புதிய தேஜாஸ் போர் விமானத்தில் இரைச்சலுடன் பறக்கிறார்.உலக அரசியல் தலை வர்களுக்கு விருந்தளிக்கிறார். ட்ரம்பை முதுகில் தட்டிக் கொடுக்கிறார். தந்தையைப் போன்று குழந்தைகளின் காதைப் பிடித்து திருகுகிறார். சில சமயங்களில் கண்ணீர் விட்டு அழவும் செய்கிறார்.  நம்மைச் சுற்றிலும் வெடிகுண்டுகளைப் போடுவதைப் போன்று  மோடியின் விளம்பரங்களால் இடைவிடாமல் தாக்கப்படுகிறோம்! கர்நாடகத்தில் பாஜக தோல்விக்கு மாநில பாஜக காரணம் என்கின்றன மீடியாக்கள்.ஆனால்  மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு முன்னால் முதல்வர் காரணம் அல்ல, மோடி தான் காரணம் என்கின்றன .   பல மீடியாக்கள் அவரது புகழ் பாடுகின்றன, துதிக்கின்றன, அஞ்சு கின்றன. கட்டவுட்டுகள், விளம்பர பதாகைகள், மீடியா சேனல்கள், செய்தித்தாள் கள் பாடப் புத்தகங்கள், ஏன் கோவிலிலும் அவர் தான்! அவர் மட்டும் தான் காட்சிய ளிக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றதும் அமைச்சரவை உடனடி யாக அமைக்கப் படவில்லை. அவர் மட்டுமே குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்கிறார். மோடியுடன் செல்லும் தகுதி அவர் கட்சியில் உள்ள ஒருவருக்கும் இல்லை. நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் போன்றவர்கள் எல்லாம் கட்சியின் சக நண்பர்களுடன் தான் எப்போதும் காட்சியளித்தார்கள், செயல்பட்டார்கள் ‌. கெடுவாய்ப்பாக இவையெல்லாம் இப்போது எடுத்துக்காட்டுகள் அல்ல. முடியாட்சி மன்னர்கள் தங்களைத் தெய்வீக அம்சம் கொண்டவர்களாக கூறிக் கொண் டது போன்றே மோடியின் ஆட்சியும் தெய்வீக அரசாட்சியாக சித்தரிக்கப்படுகிறது.

விமர்சனப் பார்வையின்றி துதிபாடும் மீடியாக்கள்

விமர்சனப் பார்வையின்றி துதிபாடும் மீடியாக்கள் மோடி செய்வதெல்லாம் மக்கள் நல நடவ டிக்கைகள்! ஆனால் எதிர்க்கட்சிகள் செய்வதெல்லாம் தேவையில்லாத இலவசங்கள்! மல்யுத்த வீராங்கனைகள் தெருவில் கைவிடப்பட்டனர். ஆனால் மோடி” பெண் குழந்தைகளை பாதுகாப்போம்”,” பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்” என்று முழக்க மிடலாம். விமர்சனப் பார்வையின்றி துதி பாடுகின்றன  மீடியாக்கள்.போராடும் விவசாயிகளை காலிஸ்தானி களாக சித்தரிக்கலாம். மோடியின் அதிபிரமாண்ட அறிக்கைகள் இல்லாமல் ஒரு நாளும்  கழிவ தில்லை.இந்திய ரூபாயின் மதிப்பு டாலரை மிஞ்சும். போர் விமானங்கள் உள்நாட்டி லேயே தயாரிக்கப்படும் போன்ற மார்தட்டும் முழக்கங்கள் காணொலிகள் மூலமாகவும், படங்கள் மூலமாகவும்  பரப்பப்படுகின்றன.  விமர்சனமற்ற மோடியின் துதி பாடுதல் இன்று இந்தியாவின் வாழ்க்கை நடைமுறையாக மாறிவிட்டது. பலவிதமான காணொலிகள், படங்கள் மூலமாக மோடி யின் பிம்பத்தை பெருக்கச் செய்யும் மார்பிங் வேலைகள் நடக்கின்றன. மீடியாக்கள் மார்பிங் நடவடிக்கைகள் மூலம் தலைவரை உருவாக்கும் மார்பிங் 1.0  இப்போது மார்பிங் 2.0 ஆகியுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பல மார்பிங்கு களும் வரலாம்.

நன்றி : அவுட்லுக், பிப்,11,2024,  தொகுப்பு : ம.கதிரேசன்