states

தொடர்ந்து அதிகரிக்கும் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை

சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

புதுதில்லி, ஜூலை 8- மோடியின் கொள்கைகள் தேசியச் செல்  வத்தைக் கொள்ளையடிப்பதாக உள்ள நிலை யில், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்  சாட்டியுள்ளார். 2023 ஜூன் மாதத்தில் நாட்டின் கிராமப்புற வேலையின்மை இரண்டாண்டுகளில் இல்லாத  விதமாக 8.73% ஆக உயர்ந்து, ஜூன் மாதத் திற்கான நாட்டின் மொத்த வேலையின்மையை  8% ஆக உயர்த்தியுள்ளது என இந்தியப் பொரு ளாதாரத்தை கண்காணிக்கும் மையம் வெளி யிட்டுள்ள தரவுகளை, அவர் ஆதாரமாக முன்  வைத்துள்ளார். இந்த தரவிற்கு மற்றொரு ஆதாரமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்  திட்ட (MGNREGS) வேலையில் சேருவோர் களின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் திடீரென அதிகரித்திருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைத் திட்டத்தை உற்று நோக்கினாலே கிராமப்புற வேலையின்மை ஒப்  பீட்டளவில் அதிகமாக இருப்பதை திடமாகக்  காணமுடியும். கடந்த ஜூன் மாதத்தில் சுமார் 4 கோடி மக்கள் (44.23 மில்லியன்) தேசிய ஊரக  வேலையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதாவது  தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை யில் சேருபவர்களின் எண்ணிக்கை நடப்பாண் டில் மட்டும் 2.3% அதிகரித்துள்ளதாக கிராமப்புற  மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆரம்பத் தரவு காட்டுகிறது. கடந்த மே மாதமும் தேசிய ஊரக  வேலைகளுக்கான தேவையும் கணிசமான அளவில் அதிகரித்தது. இதுதொடர்பாக சீத்தாராம் யெச்சூரி தனது  டுவிட்டர் பக்கத்தில்,”நமது பெரும்பான்மை யான மக்களின் நிலை தொடர்ந்து மோசமாகி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், கிராமப்புற உண்மை ஊதியம் 16 ஆவது மாதமாக சுருங்கி யுள்ளது. மோடியின் கொள்கைகள் தேசியச் செல்வத்தைக் கொள்ளையடிப்பதாக இருப்ப தால், அவரது கூட்டாளிகள் பெருஞ்செல்வங்க ளைக் குவிக்கின்றனர்” எனக் குற்றம் சாட்டி யுள்ளார்.