states

கால்நடைத் தீவனங்களின் விலைவாசி 9 ஆண்டுகளில் இல்லாத உயர்வு!

புதுதில்லி, அக்.5- கால்நடைத் தீவனங்களின் விலைவாசி உயர்வு காரணமாக, பால் மற்றும் பால் பொருட்  கள், இறைச்சியின் விலைவாசி உயரும் நிலை  ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட  உணவுப் பொருட்களுக்கான விலை வாசி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில், அரிசி, கோதுமை, ஆட்டா விலைவாசி 8 முதல் 19 சத விகிதம் வரை  அதிகரித்தன.  இவை தவிர ஒட்டுமொத்தமாக உணவுப் பொருள் பணவீக்கம், ஜூலை மாதத்தில், 6.69  சதவிகிதமாக இருந்தது, ஆகஸ்டில் 7.62 சத விகிதமாக உயர்ந்தது.  ஆகஸ்டில் மட்டும் காய்கறிகளின் விலை 13.23 சதவிகிதம், மசாலாப் பொருட்கள் 14.90 சத விகிதம், தானியங்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலைகள் 9.57 சதவிகிதம், பால்  மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலைகள்  6.39 சதவிகிதம், பழங்களின் விலை 7.39 சதவிகி தம், உணவு மற்றும் பானங்கள் தவிர, எரி பொருள் மற்றும் விளக்குகள் விலை 10.78 சத விகிதம், ஆடை மற்றும் காலணிகளின் விலை  9.91 சதவிகிதம், வீட்டுவசதி பிரிவு விலைவாசி 4.06 சதவிகிதம் என்ற அளவில் உயர்வைக் கண்டுள்ளது. இதனால், ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் கடு மையான பொருளாதாரச் சிரமத்தைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், கால்நடைத் தீவனங்களுக் கான விலைவாசி உயர்வு காரணமாக, இறைச்சி மற்றும் பால் பொருட்களின் விலைகள் மேலும்  அதிகரிக்கும் என்று செய்திகள் வெளியாகி யுள்ளன. 

பல்வேறு பகுதிகளில் கனமழை காரண மாக அல்லது பருவம் தப்பிய மழை காரண மாக ஏற்பட்ட பயிர்ச் சேதம் தீவனங்களின் விலை  உயர்வுக்கு காரணமாகியுள்ளது. இதனால் இழப்புகளைச் சமாளிப்பதற்காக விவசாயி கள் தீவனங்களின் விலையை உயர்த்தி வரு கின்றனர். மழையினால் ஏற்பட்ட பயிர்ச் சேதம் மட்டு மல்லாமல் வடமாநிலங்களில் நடைபெறும் வைக்கோல் எரிப்பும், தீவனங்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்டில் தீவனங்களின் மொத்த  விலை (Wholesale Price Index-WPI) அடிப்ப டையிலான பணவீக்கம் 25.54 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றும், இது கடந்த ஒன்பது ஆண்டுகால உச்சம் என்றும் அந்த புள்ளிவிவ ரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே தீவ னத்தின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது.  இதனால் எள்ளுப் புண்ணாக்கு விலை இரு மடங்கு அதிகரித்து குவிண்டால் 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோதுமை வைக்கோல் குவிண்டால் விலை ரூ. 2200 வரையும், உலர் தீவனம் விலை 2 ஆயி ரம் ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது. பசுந்தீவ னத்தின் விலை ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. கிலோ 5 முதல் 7 ரூபாய் வரை இருந்த கோதுமை வைக்கோல் அல்லது உலர் தீவனம்  தற்போது பல இடங்களில் கிலோ 15 முதல் 16 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.  அதாவது, பசுந்தீவனங்களுக்கான பண வீக்கம் 12 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை யும், உலர் தீவனங்களுக்கான பணவீக்கம் 25 முதல் 26 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன. தீவனங்களின் இந்த விலை உயர்வானது, விரைவில் பால் மற்றும் இறைச்சியின் விலை வாசியில் எதிரொலிக்கும் என்று கூறப்படு கிறது.

;