புதுதில்லி, ஜூலை 16- எல்ஐசியின் சொத்து மதிப்பு ரூ.5.41 லட்சம் கோடிதான் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எல்ஐசி நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறித்து கணக்கீடு செய்வதற்கு மெசர்ஸ் மில்லிமன் அட்வைசர்ஸ் எல்எல்பி என்ற நிறுவனம் நிய மிக்கப்பட்டது. இந்நிறுவனம் 2022 மார்ச் 31 நிலவரப்படி எல்ஐசி நிறுவன சொத்துகளை மதிப்பீடு செய்தது. அதன் அடிப்படையில் நிறுவனத்தின் எம்பெடட் வேல்யூ விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு எல்ஐசியின் இயக்குநர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. நிகர சொத்து மதிப்பு (என்ஏவி) மற்றும் எதிர்கால லாபத்தின் தற்போதைய மதிப்பை உள்ளடக்கி யது எம்பெடட் வேல்யூ எனப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி எல்ஐசியின் எம்பெடட் மதிப்பு ரூ.95.61 ஆயிரம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.