18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 வெள்ளியன்று நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான பிரச்சாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 அன்று கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறுகிறது. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணியும் களத்தில் நிற்கின்றன. இத்தேர்தலில் மதவெறி பாஜக ஆட்சியை வீழ்த்துவோம்; நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் பலத்தை வலுப்படுத்துவோம்; மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியை மலரச் செய்வோம் என்ற முழக்கங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் களத்தில் நிற்கிறது. அதில் முக்கியமான மாநிலம் கேரளா. கேரளத்தில் 20 தொகுதிகளிலும் இடதுஜனநாயக முன்னணி போட்டியிடுகிறது. கேரளம், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் தனது பலத்தை நிச்சயம் அதிகரிக்கும் என்று, தனது தேர்தல் பிரச்சாரக் கள அனுபவங்களின் ஊடாக விவரிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்
சீத்தாராம் யெச்சூரி.
கேரளாவில் கடந்த முறையை விட இந்த முறை நிச்சயம் இடதுஜனநாயக முன்னணி யின் மக்களவை பலம் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கேரளாவில் ஒரு இடம்தான் கிடைத்தது. இந்த முறை கூடுதல் இடங்களில் நிச்சய மாக வெல்வோம். தமிழ்நாட்டில் இரண்டு இடங்களை உறுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெறும். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியும் இரண்டு இடங்களை வெல்வது உறுதி. எனவே தமிழகத்திலிருந்து இடதுசாரி உறுப்பினர்கள் நான்கு பேர் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்பது நம்பிக்கைக்குரிய அம்சம். அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீட்டின் அடிப்படையில் சிகார் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் அம்மாநிலத்தின் விவசாயிகளது மகத்தான தலைவர்களில் ஒருவருமான அம்ரா ராம் போட்டியிடுகிறார். அவருக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்து வருகிறார்கள். அந்தத் தொகுதி யில் நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள் ளது. இதேபோன்ற நம்பிக்கை பீகாரிலும் உள்ளது. இங்கு ககாரியா தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சஞ்சய் குமார் களத்தில் நிற்கிறார். பெரும் எழுச்சி யோடு மக்கள் வரவேற்பு அளித்து வருகிறார்கள். இங் கும் வெற்றி உறுதி என்ற நிலை உள்ளது. அதேபோல மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி, காங்கி ரஸ் இடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் வலு வான முறையில் களமிறங்கி உள்ளோம். நிச்சயம் அங்கு தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற்றால் கணிசமான இடங்களில் இடதுசாரி - காங்கிரஸ் வேட்பாளர்கள் வெல்வார்கள். அங்கு நேர்மையான, சுதந்திரமான தேர்தலை தேர்தல் ஆணையம் முதலில் உறுதி செய்ய வேண்டும். மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை திரிணாமுல் காங்கிரசும் சரி, பாஜகவும் சரி சுதந்திரமான , நேர்மை யான தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை. அவர்களுக்கு இடையே ஒருவிதமான கள்ளத்தன மான புரிந்துணர்வு இருக்கிறது என்பது பிரச்சாரத்தில் மட்டுமின்றி அனைத்து அம்சங்களிலும் வெளிப்படு கிறது. அதேவேளை, வங்கத்தில் குறிப்பாக முர்ஷிதா பாத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான முகமது சலீமை களமிறக்கியுள் ளோம். முர்ஷிதா பாத் மாவட்டம் மிகப்பெரிய மாவட் டம். ஒரே மாவட்டத்தில் மூன்று நாடாளுமன்றத் தொகுதி கள் உள்ளன. இஸ்லாமிய மக்கள் பெருவாரியாக வாழ்கிற மாவட்டம். இங்கு மற்றொரு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டி யிடுகிறார். முகமது சலீமுக்கும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக் கும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. நிச்சயம் மிகப்பெரிய வெற்றி இத்தொகுதிகளில் கிடைக்கும் என்று நம்புகிறேன். திரிபுராவிலும் இடதுமுன்னணி - காங்கிரஸ் புரிந்து ணர்வின் அடிப்படையில் தலா ஒரு தொகுதியில் போட்டி யிடுகிறோம். இங்கும் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மை யாகவும் நடைபெற்றால் இந்த அணிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். நாடு முழுவதும் கேரளா, மேற்குவங்கம் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 51 இடங்களில் போட்டி யிடுகிறது. அனைத்து தொகுதிகளிலும் கட்சியின் ஊழி யர்கள், இடதுமுன்னணி தோழர்கள் பெரும் உற்சா கத்துடனும் அர்ப்பணிப்புணர்வுடனும் தேர்தல் களப் பணியில் நிற்கிறார்கள். மக்களிடையே மோடி எதிர்ப்பு அலை பெரிய அளவுக்கு உள்ளது. எனவே கணிச மான தொகுதிகளில் இந்த முறை இடதுசாரிகளுக்கு மக்கள் வாய்ப்பளிப்பார்கள் என்று உறுதியாக நம்பு கிறேன்.