states

தேசத் துரோக சட்டப்பிரிவு 124ஏ-வை ரத்து செய்யக் கூடாது; குறைந்தது 7 ஆண்டாவது சிறையில் தள்ள வேண்டும்!

புதுதில்லி, ஜூன் 3- “தேசத்துரோக சட்டத்தின் பிரிவு ‘124ஏ’  கட்டாயம் தேவை” என்று இந்திய சட்ட ஆணை யத்தின் தலைவர் ரிது ராஜ் அவஸ்தி, ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தற்போது வழங்கப்  பட்டு வரும் 3 தண்டனையை 7 ஆண்டுகளா கவோ, அல்லது அதற்கும் அதிகமாக இரட் டைப்படையிலோ அதிகரிக்க வேண்டும் என் றும் ஆபத்தான யோசனைகளை ரிது ராஜ் அவஸ்தி வழங்கியுள்ளார். இந்திய நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டு களாகி விட்ட நிலையிலும், ஆங்கிலேய கால னிய ஆட்சியின் எச்சமாக இருக்கும் ‘தேசத் துரோக’ சட்டப்பிரிவு 124ஏ தேவையா? என்பது  அவ்வப்போது முன்னெழும் விவாதமாக இருக்  கிறது.  தேசத்துரோக சட்டத்தின் 124ஏ பிரிவு, கருத்துரிமையை நசுக்குவதாக சமூக செயற்  பாட்டாளர்கள், எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வரு கின்றனர். இதனை நீக்குவது தொடர்பாக நீதி மன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டு உள்ளன.

உச்சநீதிமன்றமும், இதுதொடர்பாக 2021-ஆம் ஆண்டு ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில், தேசத்துரோகச் சட்டப்பிரிவு 124ஏ வேண்டுமா? என்றும் கேள்வி யெழுப்பி இருந்தது. இதுதொடர்பாக பிர மாணப் பத்திரம் தாக்கல் செய்த ஒன்றிய அரசு, அதில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய அரசு இதுபோன்ற 1,500 சட்டப் பிரிவுகளை நீங்கியுள்ளது. இதனால் சுமார் 25 ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கப்  பட்டன. அதேபோல இந்த 124ஏ சட்டப் பிரிவை  நீக்குவது குறித்தும் ஆலோசனை மேற் கொண்டு வருகிறது” என்று கூறியிருந்தது. 2022 மே மாதம் இந்த விவகாரத்தில் தீர்ப்ப ளித்த- அன்றைய தலைமை நீதிபதி என்.வி.  ரமணா தலைமையிலான 3 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, ஒன்றிய அரசு முடிவெடுக்கும் வரை, இந்திய தண்ட னைச் சட்டத்தில் உள்ள 124A என்ற தேசத் துரோக சட்டப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யக்  கூடாது என உத்தரவிட்டது. ஏற்கெனவே, தேசத்  துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை யில் இருப்பவர்கள் பிணை கோரலாம் என்றும் கூறியது. இந்தப் பின்னணியில், ‘124ஏ’ சட்டப்பிரி வின் தேவை குறித்து ஆராயுமாறு இந்திய சட்ட ஆணையத்தின் தலைவரும், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதி பதியுமான ரிது ராஜ் அவஸ்தியை, 2016-ஆம்  ஆண்டே மோடி அரசு கேட்டுக் கொண்டிருந் தது. 

இந்நிலையில்தான், “தேசத் துரோக சட்டத்  தின் பிரிவு 124ஏ கட்டாயம் தேவை” என்று 22-ஆவது சட்ட ஆணையத்தின் தலைவர் ரிது  ராஜ் அவஸ்தி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி யுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதா வது: “இந்திய தண்டனைச் சட்டத்தில் 124ஏ பிரி வைத் தக்க வைத்துகொள்ள வேண்டும். இருப்  பினும் இதில் சில திருத்தங்கள் அவசியமா கிறது. அதாவது குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டுகளாக இருக்கிறது. அதேபோல அதிக பட்சமாக ஆயுள் தண்டனை இருக்கிறது. இதில் இந்த குறைந்தபட்ச தண்டனைக்கான ஆண்டுகளை ஒற்றைப்படையிலிருந்து இரட் டைப்படைகளாக மாற்ற வேண்டும். அல்லது 7 ஆண்டுகளாக உயர்த்தப்பட வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் பலர் தவறாக தண்டிக் கப்பட்டுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. எனவே இதனை தடுக்க ஒன்றிய அரசு மாதிரி வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். 124ஏ சட்டப்பிரிவு ‘காலனித்துவ மரபு’ என்கிற ஒற்றை காரணத்திற்காகவே அதனை ரத்து செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவேளை இந்த சட்டப்பிரிவு இல்லாமல் போய்விட்டது எனில், அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டுபவர்களை கைது செய்ய பயங்கரவாத எதிர்ப்புச் சட்  டங்களைதான் பயன்படுத்த வேண்டி யிருக்கும். இது 124ஏ சட்டப் பிரிவைவிட கொடூ ரமானதாகும். மற்ற நாடுகள் இதுபோன்ற சட்டங்களை நீக்கிவிட்டது என்பதற்காக இந்தி யாவும் அப்படி செய்ய வேண்டிய அவசிய மில்லை. மேலும், இப்படி செய்வது உண்  மைக்கு புறம்பானதாக இருக்கும். மட்டுமல் லாது நீதிமன்றம் தனது பொன்னான நேரத்தில் இதில் செலவிட வேண்டாம்.”  இவ்வாறு ரிது ராஜ் அவஸ்தி கூறியுள் ளார்.

காலத்திற்குப் பொருந்தாத  தேசத் துரோகக் குற்றப்பிரிவை ரத்து செய்க!

சிபிஎம் வலியுறுத்தல்

புதுதில்லி, ஜூன் 3- காலத்திற்குப் பொருந்தாத தேசத் துரோ கக் குற்றப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சி யின் அரசியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதா வது: இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள  தேசத்துரோகக் குற்றப்பிரிவு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்வறிக்கைகளை மறுதலித்தும், அவை முழுமையாக இல்லை  என்றும் கூறி மேற்படி குற்றப்பிரிவை  மேலும்  முறுக்கி சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள பரிந்துரைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு பரி சீலனை செய்தது. உச்சநீதிமன்றம், காலத்திற்குப் பொருந்  தாத இந்தச் சட்டப்பிரிவை சட்டப் புத்த கங்களிலிருந்தே நீக்க வேண்டும் என்றும் அதற்குத் தேவையான நாடாளுமன்ற நட வடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றும் கோரி அதுவரையிலும் இந்தத் தேசத் துரோ கக் குற்றப்பிரிவின் அமலாக்கத்தை நிறுத்தி யும் வைத்திருந்தது. ஆயினும் சட்ட ஆணையம், இந்த தேசத் துரோகக் குற்றப்பிரிவுக்குக் குறைந்த பட்ச தண்டனை முன்பு மூன்றாண்டுகள் என்றிருந்ததை இப்போது ஏழு ஆண்டுகள் என்று விரிவுபடுத்தியிருப்பதன் மூலம் இச்சட்டப்பிரிவின் ஷரத்துக்களை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைத்து அமலாக்கத் துறையினரும், மத்தி யக் குற்றப் புலனாய்வுக் கழகமும் (சிபிஐ)  மிகவும் வெட்கக்கேடான முறையில் ஏவப் பட்டுவரும் பின்னணியில், தேசத் துரோகக் குற்றப்பிரிவு குறித்து இதுபோன்ற பரிந்து ரைகள் அளித்திருப்பது தீய அறிகுறிகளா கும். இந்தக் காலத்திற்குப் பொருந்தாத தேசத் துரோகக் குற்றப்பிரிவு ரத்து செய் யப்பட வேண்டும் என்றே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.                        (ந.நி.)
 

;