states

img

பாஜக ஆளும் தில்லியில் சட்டம்-ஒழுங்கு மோசமாகிறது 24 மணிநேரத்தில் 55 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பாஜக ஆளும் தில்லியில் சட்டம்-ஒழுங்கு மோசமாகிறது

24 மணிநேரத்தில் 55 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. அம்மாநில காவல்துறை அதிகாரம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இத்தகைய சூழலில், தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர் கதையாக உள்ளது.  திங்கள்கிழமை மர்ம நபர்களால்  மின்னஞ்சல் மூலம் 8க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதே போல  புதன்கிழமை அன்று மால்வியா நகரில் உள்ள ஆந்திரப் பள்ளிகள் உள்ளிட்ட 50 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்நிலையில், ஒரே வாரத்தில் 3ஆவது முறையாக தில்லியில் வியா ழக்கிழமை அன்று மேலும் 5 பள்ளி களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. பிரசாத் நகர், துவா ரகா செக்டார் உள்ளிட்ட பகுதிகளில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கள் வந்தன. தகவலறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக பள்ளிக்கு விரைந்து, மாணவர்களை வெளியேற்றினர். பின்னர் மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்டு காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். சோதனை முடி வில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டு பிடிக்கப்படாததால் இந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.