பருத்தி இறக்குமதி வரி நீக்க அறிவிப்பு விவசாயிகளுக்கு மரண அடியாக அமையும் மோடி அரசுக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி கடும் கண்டனம்
ஒன்றிய நிதி அமைச்சகம் பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி ஆகியவற்றை உடனடி நடைமுறையுடன் நீக்கி யுள்ளது. ஆகஸ்ட் 19, 2025 முதல் செப்டம்பர் 30 வரை இந்த நடவடிக்கை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. பொதுத் தேவைக்காக பருத்தி இறக்குமதி வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி நீக்கம் அவசியம் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பருத்தி இறக்கு மதி வரியை நீக்கும் இந்த அறி விப்பு நாடு முழுவதும் உள்ள பருத்தி விவசாயிகளுக்கு மரண உத்தரவாதமாக அமையும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி கடுமையான கண்டனம் தெரி வித்துள்ளது. இறக்குமதி வரி நீக்கம் உள்நாட்டு பருத்தி விலையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத் தும் என எஸ்கேஎம் எச்சரித்துள் ளது. பருத்தி விலை நிச்சயமாக வீழ்ச்சியடையும் என்றும், இதனால் விவசாயிகள் மேலும் துன்பத்திற் கும் கடன் சுமைக்கும் ஆளாவார் கள் என்றும் எஸ்கேஎம் தெரிவித் துள்ளது. பிரதமர் மோடியின் இரட்டைத் தன்மை எஸ்கேஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அறிவிப்பு மூலம் பிரதமர் மோடி மீண்டும் விவசாயிகளுக்கு எதிராக துரோ கத்தையும் இரட்டைத் தன்மை யையும் வெளிப்படுத்தியுள்ளார் என கடுமையாகக் குற்றம் சாட் டப்பட்டுள்ளது. பருத்தி இறக்கு மதி வரி தொடர்பாக பிரதமர் மோடி யின் முன்னுரிமை என்ன, நிலைப் பாடு என்ன என்பதை அவர் தெளி வாக விளக்க வேண்டும் என எஸ்கேஎம் கோரியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக மோடி அரசால் பருத்தி விவசாயிகளுக்கு சி2+50 சதவீத விகிதத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு போதும் வழங்கப்படவில்லை என எஸ்கேஎம் குற்றம் சாட்டியுள்ளது. வேளாண் செலவு மற்றும் விலை கள் ஆணையம் 2025ஆம் ஆண்டின் கரீஃப் பயிர் பருவத்திற்கு அறி வித்த குறைந்தபட்ச ஆதரவு விலை யின்படி, பருத்தியின் விலை ரூபாய் 7,710 ஆகும். ஆனால் இது சி2+50 சதவீத விகிதத்தின்படி ரூபாய் 10,075 என்ற விலையை விட ரூபாய் 2,365 குறைவாகும். விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு இதன் காரணமாக இந்தியா வில் பருத்தி பயிரிடப்படும் முழுப் பகுதியும் விவசாயிகள் தற்கொலை அதிகம் நடைபெறும் பிராந்திய மாக மாறியுள்ளது என எஸ்கேஎம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தற்போதைய பருத்தி இறக்குமதி வரி நீக்கம், லட்சக்கணக்கான பருத்தி விவசாயிகள் குடும்பங்க ளின் வாழ்வாதாரத்தை மேலும் அழிக்கும் என எச்சரித்துள்ளது. நாட்டில் பருத்தி சாகுபடி பரப்ப ளவு சுமார் 120.55 லட்சம் ஹெக் டேர் ஆகும். இது உலகின் மொத்த பருத்தி பரப்பளவில் சுமார் 36 சத வீதமாகும். பருத்தி பரப்பள வின் அடிப்படையில் இந்தியா உல களவில் முதலிடத்தில் உள்ளது. மாநிலங்கள் அடிப்படையில், மகாராஷ்டிராவில் பருத்தி சாகு படிக்கு அதிகபட்ச பரப்பு உள்ளது. அதற்கு அடுத்து குஜராத் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்க ளும் உள்ளன. குறிப்பாக நாட்டில் சுமார் 67 சதவீத பருத்தி சாகுபடி மழைநீரை மட்டுமே நம்பியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது. கோரிக்கைகள் இந்நிலையில், பிரதமர் மோடி பருத்தி இறக்குமதி வரியை நீக்கும் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என எஸ்கேஎம் கோரியுள்ளது. பருத்தி க்கு ரூபாய் 10,075 என்ற சி2+50 சதவீத விகிதத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2014 பொ துத்தேர்தலில் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிக ளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் மோடி அரசுக்கு எஸ்கேஎம் கோ ரிக்கை விடுத்துள்ளது. மேலும், பருத்தி இறக்குமதி வரி நீக்கத்தை எதிர்த்து கிராம அளவி லான கூட்டங்கள் நடத்தி தீர்மா னங்களை நிறைவேற்றி பிரதம ருக்கு அனுப்ப வேண்டும் என எஸ்கேஎம் இந்தியா முழுவதும் உள்ள பருத்தி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.