states

img

‘ஆளும் கட்சி பற்றி கவலை இல்லை’

புதுதில்லி, டிச.25- ‘‘அரசியலமைப்புச் சட்டத்துக்கு எந்தவொரு நெருக்கடி வந்தாலும் நான்  தெருவில் வந்து நிற்பேன். எந்தக் கட்சி  ஆள்கிறது என்பதைப் பற்றி எனக்கு  கவலை இல்லை. நான் அதற்காகவே இந்த யாத்திரைக்கு வந்திருக்கிறேன்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும்  இந்திய ஒற்றுமை யாத்திரை சனிக் கிழமை தில்லி வந்தடைந்தது. தில்லி செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகரும், மக்கள்  நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான கமல்ஹாசன் கலந்து கொண்டு  பேசுகையில், ‘‘இந்த யாத்திரைக்கு நான் கமல்ஹாசனாக வந்திருக்கி றேன். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ  அப்போதெல்லாம் தெருவில் இறங் கிப் போராட நாங்கள் வருவோம். அர சியலமைப்புச் சட்டத்துக்கு எந்த வொரு நெருக்கடி வந்தாலும் நான்  தெருவில் வந்து நிற்பேன். எந்தக் கட்சி ஆள்கிறது என்பதைப் பற்றி  எனக்கு கவலை இல்லை. நான்  அதற்காகவே இங்கு வந்திருக்கி றேன். நாட்டுக்கான நேரம் வந்துவிட்ட தால், நான் இங்கு வந்தேன்.

நான்  நினைக்கும் ஒற்றுமை என்னவென் றால், மாநிலங்கள்தான். நான் இணைக்க விரும்புவது பிரகாசமான எதிர்காலம் கொண்ட நமது தேசத்தின் கடந்தகால புகழ்வாய்ந்த மரபு களைத்தான். எனது மாநிலத்திற்கும், மக்க ளுக்கும், எனது கட்சியினருக்கும் நான்  உதாரணமாக இருக்க விரும்புகிறேன். நாட்டிற்கான பிரச்சனைகளுக்காக வரும்போது கட்சிக் கொடிகளின் நிறங்களை மறந்துவிட வேண்டும். தேசியக் கொடியில் உள்ள மூன்று வண்ணங்கள் மட்டுமே நினைவில் வரவேண்டும்.  அவ்வாறான பணியைச் செத் துள்ள ராகுல் காந்தியை நான் மதிக்கி றேன். இதை செய்ததற்காக நான்  அவரை பாராட்டுகிறேன். உங்களைப் போலவே இந்த யாத்திரை முழுவ தும் நானும் மகிழ்ச்சிக் கொள்கிறேன்’’ என்று பேசினார்.