states

img

கற்றல் ஊடகமாக இந்தி

புதுதில்லி, டிச. 9- பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்முறை கல்வி நிறுவனங்களில் இந்தியை கற்றலுக்கான ஊடகமாக மாற்ற அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்ற விவ காரக் குழுவின் அறிக்கை க்கு எதிராக மாநிலங்களவை யில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி பேசும் மாநிலங் களில் உள்ள மத்திய பல் கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களில் கற்றல் மொழியாகவும் பிற  செயல்பாடுகளின் மொழி யாகவும் இருக்கும்.  அத்தகைய மாநிலங் களில், ஐஐடி,  ஐஐஎம்,  எய்ம்ஸ் போன்ற தொழில்நுட்ப கல்வி நிறு வனங்களிலும், கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறு வனங்களிலும் இந்தி கட்டாய மாக்கப்படும்.  தவிர்க்க முடியாத இடங்களில் மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் “அதுவும் இந்திக்கு வழி  வகுக்கும்” என்பது அமித் ஷா தலைமையிலான அலு வல் மொழி நாடாளுமன்ற விவகாரக் குழுவின் சில பரிந்துரைகள்.

அதிகாரம் உள்ளதா?

1963 ஆம் ஆண்டின் அலு வல் மொழிச் சட்டம் கூறிய படி அல்ல நாடாளுமன்ற விவகாரக் குழு அறிக்கை யில் அதிகாரப்பூர்வ மொழி,  என்ற உண்மையை ஜான்  பிரிட்டாஸ் எம்.பி சுட்டிக் காட்டினார். தேசியக் கல்விக் கொள்கையில் இந்தி மொழி யைப் பயன்படுத்துவதைக் குறிப்பிடும் உள்துறை அமைச்சகம், அலுவல் மொழிச் சட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்களில் பயிற்று விக்கும் முறையைத் தீர்மா னிக்க குழுவுக்கு அதிகாரம் உள்ளதா? என்ற ஜான் பிரிட் டாஸ் எம்.பியின் கேள்விக்கு திருப்திகரமான பதில் அளிக்கவில்லை. அலுவல் மொழிச் சட்டம், 1963ன் படி, ஒன்றிய அர சின் அனைத்து அதிகாரப் பூர்வ மற்றும் பிற நோக்கங் களுக்காகவும் இந்தியுடன் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.  அதை மாற்ற வேண்டு மானால், இந்தி அலுவல் மொழியாக இல்லாத அனைத்து மாநிலங்களும் மாநிலங்களவையும் மக்க ளவையும் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதை ஏற்றுக்கொள்வ தாக ஜான் பிரிட்டாசின் கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.