states

img

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் பலி எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு

ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட் டத்திற்கு அருகே சோனம்மார்க் என்ற இடத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை புலம் பெயந்த தொழிலா ளர்கள் வாழும் பகுதி யில் பயங்கரவாதி கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் உள்ளூர் மருத்துவர், புலம் பெயர்ந்த தொழிலா ளிகள் 5 பேர் என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த நபர்கள் கந்தர்பால் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், திங்களன்று அதி காலை சிகிச்சை பெற்று வந்த புலம் பெயர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் “தி ரெசிஸ்டன்ஸ் போர்ஸ்” எனப்படும் லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பு கந்தர்பால் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.