அகர்தலா, அக்.25- “நாட்டின் சொத்துக்களின் எஜ மானர்கள் மக்களேயாவர். ஆனால் சொத்துக்களைக் காக்க வேண்டிய மேலாளரான மோடியோ, நாட்டின் சொத்துக்களை சூறையாடிக் கொண்டிருக்கிறார். அவரை மாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி கூறினார். திரிபுரா தலைநகர் அகர்தலா வில் மாபெரும் பேரணி/பொதுக் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்திருந் தது. இக்கூட்டத்தை நடத்தவிடா மல் தடுத்திட, அங்கே ஆட்சிசெய்து வரும் பாஜக பல்வேறு விதங்களி லும் சூழ்ச்சிகளை மேற்கொண்டது. அனைத்தையும் தகர்த்தெறிந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றார்கள். கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்துகையில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது: பாஜக, பல்வேறு தடைகளை விதித்திருந்தபோதிலும் அவற்றை யெல்லாம் தகர்த்தெறிந்து மாபெரும் அளவில் இங்கே பங்கேற்றுள்ள மக்கள் பாஜக அரசாங்கத்திற்கு இதன்மூலம் ஒரு செய்தியை அளித்திருக்கிறார்கள். “உங்களால் மக்களுக்கு சேவை செய்ய முடிய வில்லை என்றால், ஆட்சிக்கட்டிலி லிருந்து இறங்கிக் கொள்ளுங்கள்” என்பதே அந்த செய்தியாகும். மக்க ளுக்குச் சேவை செய்யக்கூடிய ஒரே அணி இடதுமுன்னணி மட்டுமே யாகும்.
மோடியின் எட்டரை ஆண்டு கால ஆட்சியில் அவருடைய கூட்டுக் களவாணிகளான முதலாளிகள் நாட்டின் பொதுத்துறை வங்கிகளி லிருந்து கடனாக வாங்கிய 11.5 லட்சம் கோடி ரூபாயை மோடி தள்ளுபடி செய்திருக்கிறார். கடந்த 19 நாட்களில் மட்டும் நாட்டின் மக்கள் தொகையில் 4 கோடிப் பேர் வேலை இழந்துள்ளார்கள். நாட்டின் சொத்துக்களின் எஜமானர்கள் மக்களேயாவர். ஆனால் இதனை நிர்வகிக்கவேண்டிய மேலாளரான மோடியோ, அவற்றை சூறையாடி கொண்டிருக்கிறார். இதனை அனு மதிக்க முடியாது. அவரை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. இவ்வாறு சீத்தாராம் செய்சூரி பேசினார்.
மாணிக் சர்க்கார்
கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்கார் பேசுகையில், மக்கள் தீர்மா னித்துவிட்டால், முடியாது என்பது எதுவும் இல்லை என்பதற்கு இங்கு திரண்டிருக்கிற கூட்டமே சாட்சி யாகும் என்றார். இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் முன்வர வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
ஜிதேந்திர சௌத்ரி
கட்சியின் திரிபுரா மாநில செய லாளர் ஜிதேந்திர சௌத்ரி பேசுகை யில், பழங்குடியினர் உரிமைகளை பாஜகவிடம் யாசகம் கேட்டு பெற்று விட முடியாது. அவற்றை வெகு ஜனப் போராட்டங்கள் மூலமாகவே வென்றெடுக்க முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்ன ணியும், கணமுக்தி பரிசத்தும் மக்களின் மகத்தான ஆதரவுடன் அவற்றைப் பெறுவது திண்ணம்.