states

கிருஷ்ணகிரி டாடா ஆலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கே அதிக வாய்ப்பா?

கிருஷ்ணகிரி, நவ.25- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி க்கோட்டை தாலுகாவில் அமைக்கப் பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தில் அதிக எண்ணி க்கையில் புலம்பெயர் தொழிலா ளர்களுக்கு வேலை அளித்த குற்றச்சாட்டு தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு ள்ள அறிக்கையில்,கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலு காவில் அமைந்துள்ள டாடா எலெக்ட் ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமி டெட் நிறுவனத்தில் அதிக எண்ணிக் கையில் புலம்பெயர் தொழிலா ளர்களுக்கு வேலை அளித்த குற்றச் சாட்டு தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில், “டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரை வேட் லிமிடெட் நிறுவனம், மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வ தற்காக தனது தொழிற்சாலையை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள GMR தொழிற்பூங்காவில், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்து வரு கிறது. 4684 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுவரும் இத்தொழிற் சாலையின் மூலம் ஏறத்தாழ 18000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாக பத்திரிக்கை செய்தி களும் புகார்களும் அரசிற்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்நிறுவனம் தற்போது வரை தமிழ்நாட்டைச் சார்ந்த ஏறத்தாழ 5500  நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து ள்ளதாக தெரிவித்துள்ளது. வணிக ரீதி யிலான உற்பத்தியினைத் தொடங்கும் போது பணியாளர் தேவையில் ஏறத்தாழ 80 விழுக்காடு பணி யிடங்களுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த வர்களை நியமிக்க டாடா எலெக்ட்ரா னிக்ஸ் நிறுவனம் பொறுப்புறுதி அளித் துள்ளது. பல மாவட்டங்களில் நடந்த  வேலைவாய்ப்பு முகாம்களில் 7559 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களில், 1993 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அமைந் துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 3 நாட்கள் நடந்த  வேலைவாய்ப்பு முகாம்களில் 895 நபர்கள் கலந்துகொண்டதில், 355 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்க ளுக்கு நிறுவனத்தால் வேலை வாய்ப்பு வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிற தொழில் நிறுவனங்களும் தமிழ் நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கு வதை இந்த அரசு உறுதி செய்யும்”  என்று தங்கம் தென்னரசு கூறி யுள்ளார்.

;