பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார்?
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் பாஜக கட்டவிழ்த்து விட்ட வன்முறை யால் இன்று வரை அம்மாநிலம் இயல்பு நிலையயை இழந்து கலவர பூமியாக காட்சி அளித்து வருகிறது. இந்த வன் முறையில் 221க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்ததுடன், பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். வன்முறை கட்டுக்குள் வராததால் 2025 பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி பாஜக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடி யரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது. குறிப்பாக மணிப்பூரில் வன்முறை வெடித்த பின்பு இன்று வரை பிரதமர் மோடி அம்மாநிலத்திற்கு செல்ல வில்லை. “இந்தியா” கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மட்டுமே மணிப்பூருக்கு சென்று அம்மாநில மக்களுக்கு சென்று ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி வரும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் (செப்டம்பர் 12 - 14) மணிப்பூ ருக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்ப தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் இம்பால் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் கலவரத்தால் இடம்பெய ர்ந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும், மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய உள் கட்டமைப்புத் திட்டங்களை அறிவிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன. ஆனாலும் ஒன்றிய அரசு பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் தொடர் பாக அதிகாரபூர்வமாக எந்த தகவலை யும் வெளியிடவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.