ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ், சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ கட்சி களுக்கிடையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு வரு கிறது. மக்களவைக்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத் தில் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு 25 மக்க ளவைத் தொகுதிகளிலும், 175 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. தொகுதிப் பங்கீட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மக்களவை மற்றும் எட்டு சட்டமன் றத் தொகுதிகளில் போட்டியிடுவதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடை யிலும் பங்கீடு நடந்து முடிந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க ட்சிக்கு ஒரு மக்க ளவைத் தொகுதியும், எட்டு சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப் பட்டுள்ளன. இவற்றிற்கான வேட்பாளர்களையும் கட்சி அறி வித்துள்ளது. அரக்கு மக்களவைத் தொகுதியில் கட்சி சார்பில் பசிபென்டா அப்ப ளநரசா போட்டியிடுகிறார். இது பழஙகுடி மக்களுக்கு ஒதுக்கப் பட்ட தொகுதி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.