states

img

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் “இந்தியா” கூட்டணி கட்சிகள் முடிவு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் “இந்தியா” கூட்டணி கட்சிகள் முடிவு

புதுதில்லி மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்க ளில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆர்)  போது, ஏராளமான வாக்காளர் பெயர்கள் நீக்கப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் மேற்கு வங்கத்தில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு இன்னும் எஸ்ஐஆர் பணி நிறைவடையவில்லை. அதே போல எஸ்ஐஆர் நடைபெற்ற தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் (யூனியன் பிரதேசம் சேர்த்து) திருத்த பணிகள் முடிவடைந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்பும் தேர்தல் நடைபெறும் வரை வாக்காளர்களை சேர்த்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேர்தலை எதிர்கொள்ள தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் குளறுபடியை ஏற்படுத்தும். கடைசி நேர வாக்காளர்கள் சேர்ப்பு தில்லு முல்லு கார ணமாக தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு எதிராக “இந்தியா” கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தற் போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வில் இந்தியத் தலை மைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தை கொண்டு வர ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள் ளன. திங்களன்று காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே தலைமையில் நடந்த கூட்டத் தில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு  பதவி நீக்கத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர். அடுத்து என்ன? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்குவது என்பது உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கு இணையான கடினமான நடைமுறையாகும். இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர மக்களவை யில் குறைந்தது 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையில் 50 உறுப்பினர்களின்  கையெழுத்து அவசியம். தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டவுடன், குற்றச்சாட்டுகளை விசா ரிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படும். இந்தக் குழு குற்றச்சாட்டுகளை உறுதி செய்தால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும் பான்மையுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற் றப்பட வேண்டும். இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்ட பிறகு, குடியரசுத் தலைவர் இறுதி உத்தரவைப் பிறப்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.