states

இந்துத்துவா குண்டர்கள் அட்டூழியம் சிறுமிக்கு கும்பல்  பாலியல் வன்கொடுமை

இந்துத்துவா குண்டர்கள் அட்டூழியம் சிறுமிக்கு கும்பல்  பாலியல் வன்கொடுமை

ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி போரிஜோர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றி ருந்தார். அங்கு நடைபெறும் கோவில் திருவிழாவில் சிறுமி கலந்து கொண்டார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல், சிறு மியை கடத்தி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. ஒருவழியாக அங்கிருந்து தப்பி வந்த  சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பாஜக ஆளும் மாநிலங்களைப் போல அல்லாமல், அடுத்த சில மணிநேரத்தில் 4 பாலியல் குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்க்கட்சி களின் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜேஎம்எம்-இன் ஆட்சி நடை பெற்று வரும் நிலையில், சிறுமியை பாலி யல் வன்கொடுமை செய்த 4 பேரும் கோவில் திருவிழா அமைப்பில் உள்ள இந்துத்துவா குண்டர்கள் எனக் கூறப் படுகிறது.