இந்தியாவில் வாழும் 1.3 பில்லியன் மக்கள், உலக சுகாதார அமைப் பால் நிர்ணயிக்கப்பட்ட மாசு வரம்பை மீறிய பகுதி களில் வாழ்கின்றனர். மிக அதிகமாக மாசு பட்ட இடங்களில் வாழ்வதாகவும் நுண் ணிய துகள் காற்று மாசுபாட்டால், சராசரி இந்தியரின் ஆயுட் காலத்தில் 5.3 ஆண்டுகள் குறைகின்றன என்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனத் தால் நடத்தப்பட்ட ஆய்வில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மாசு அளவு தொடர்ந்து நீடிப்பதால் உலக சுகாதார அமைப்பின் வரம்புக்கு ஏற்ப சராசரியாக தில்லி மக்கள் தங்கள் வாழ்நாளில் 11.9 ஆண்டுகளை இழக்கும் அபாயத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள் ளது. குறைந்த மாசடைந்த மாவட்டமாக இருப்பது பஞ்சாபின் பதான்கோட். ஆனால் அங்கேயே காற்றின் மாசு, உலக சுகாதார அமைப்பின் வரம்பைவிட ஏழு மடங்கு அதிகமாக உள்ளது. அங்கும் தற் போதைய நிலை நீடித்தால் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்நாளில் 3.1 ஆண்டு களை இழக்க நேரிடலாம் என்று குறிப்பி டப்பட்டுள்ளது.