மத்தியப்பிரதேசத்தில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்தவர், தேர்தல் நெருங்கும் போது பழங்குடியின மக்களுக்குச் செருப்பு, குடைகளை விநியோகிக்கிறார். முக்கியமாக மத்தியப்பிரதேச பாஜக ஆட்சியில் 1.5 லட்சம் இளம் பெண்கள் மாயமாகியுள்ளனர். தினமும் 17 பாலியல் வன்குற்ற சம்பவங்கள் நடக்கின்றன.