குஜராத் பாலம் விபத்து பலி எண்ணிக்கை அதிகரிப்பு
குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி யான மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குஜராத்தின் வதோதரா மாவட்டத் தில் உள்ள மஹிசாகர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் கடந்த மாதம் இடிந்து விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 21 பேர் பலியாகி இருந்த னர். படுகாயமடைந்திருந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த ஒருவர் பலியானதை தொடர்ந்து பலி எண்ணிக் கை 22 ஆக அதிகரித்துள்ளது என அம் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் காணாமல் போன ஒருவர் இன்னும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.