நானா படோல் பேட்டி
மும்பை, பிப்.21- பாஜகவுக்கு எதிரான முன்னணி யை உருவாக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் முயற்சி யை வரவேற்பதாக, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறியுள்ளார். 2024-ஆம் ஆண்டிற்கான மக்கள வைத் தேர்தலில், பாஜக-வுக்கு எதி ராக, காங்கிரஸ், இடதுசாரிகளை தவிர்த்து, ஏனைய அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒருங்கிணைக்கப் போவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரைச் சந்தித்தார். எனி னும், காங்கிரஸ், இடதுசாரிகளை தவி ர்த்துவிட்டு எதிர்க்கட்சிகள் கூட்டணி என்ற அவரது முன்வைப்பை யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. “காங்கிரஸைத் தவிர்த்து தேசிய அளவில் ஒரு கூட்டணியை அமைப் பது தொடர்பாக திரிணாமுல் காங்கி ரஸ் தலைவர் மம்தா ஆலோசித்து வருகிறார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியைத் தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதும், அது இல்லாமல் யுபிஏக்கு இணையான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவதும் கிட்டத் தட்ட சாத்தியமே அற்றது.
இது ஆளும் பாஜக மற்றும் “பாசிச” சக்திகளை வலுப்படுத்துவதற்குச் சமம்” என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார். சரத் பவாரும் இதை யே கூறிவிட்டார். இதனால் மம்தாவின் ஆரம்பமே தோல்வியில் முடிந்தது. இதனிடையே, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பாஜக வுக்கு எதிரான அணி என்ற முழக் கத்தை கையில் எடுத்துள்ளார். சிவ சேனா தலைவரும் மகாராஷ்டிர முதல் வருமான உத்தவ் தாக்கரே-வின் அழைப்பின் பேரில், அவரையும், தேசி யவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவா ரையும் நேரில் சந்தித்துவிட்டு வந்துள் ளார். “நாட்டின் அரசியல் மற்றும் வளர்ச்சியின் வேகம் குறித்து விவா திக்கவே நான் மகாராஷ்டிராவுக்கு வந்தேன். உத்தவ் ஜியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இரு வரும் சகோதரர்களாக பல விஷ யங்கள் தொடர்பாக விவாதித்தோம். எங்களைப் போன்றே சிந்தனை கொண்ட பலர் நாட்டில் உள்ளனர்.
அவர்களிடமும் நாங்கள் பேசி வரு கிறோம். இன்னும் சில நாட்களில் ஹைதராபாத் அல்லது வேறு ஏதே னும் இடத்தில் எங்களின் ஆலோ சனை நடைபெறும். எங்களின் சந்திப் பின் நல்ல முடிவை மிக விரைவில் நீங்கள் காண்பீர்கள்” என்று பேட்டி யும் அளித்துள்ளார். “அசாதாரண சூழலையும், தரம் தாழ்ந்த அரசியலையும் முன்னெ டுப்பது இந்துத்துவா அல்ல. இந் நிலை தொடர்ந்தால் நாட்டின் எதிர் காலம் என்னவாகும் என்ற தற்போது கேள்வி எழுகிறது. மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே இருக்க வேண்டிய நல்ல சூழல் தற்போது இல்லை. இதனால் நாங்கள் புதிய துவக்கத்தை முன்னெடுத்துள்ளோம். மகாராஷ்டிராவில் இருந்து உரு வான கூட்டணிகள் வெற்றி பெற்றுள் ளன” என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவும் அதனை வழி மொழிந்துள்ளார்.
இந்நிலையில், கே. சந்திரசேகர ராவின் பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஓரணி யில் திரட்டும் முயற்சியை இந்த முயற் சியை மகாராஷ்டிரா காங்கிரஸ் தலை வர் நானா படோல் வரவேற்றுள்ளார். “பாஜக எதிர்ப்பு முன்னணியை உருவாக்க ராவ் மேற்கொண்ட முயற்சிகள் வரவேற்கத்தக்கது. ஆனால் காங்கிரஸ் இல்லாமல், அத்த கைய முயற்சிகள் முழுமையடையாது அல்லது வெற்றியடையாது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி முன்பு நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்து வந்தது. ஆனால், தற்போது பாஜக குறித்த அதன் பார்வை மாறியுள்ளது. இந்த மனமாற்றத்தையும் காங்கிரஸ் வரவேற்கிறது” என்று படோல் கூறி யுள்ளார்.