சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வாழ்த்துச் செய்தி
2023 செப்டம்பர் 22 அன்று திருநெல்வேலியில் தீக்கதிர் நாளிதழின் ஐந்தாவது பதி ப்பு தொடங்கப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். சென்னையில் 1963 ஜூனில் வார இத ழாக முதலில் தொடங்கப்பட்டு, பின்னர் மது ரைக்கு மாற்றப்படும்போது நாளிதழாகப் பரிணமித்தது. இரண்டாவது பதிப்பு 1993 நவம்பர் 7 அன்று சென்னையிலிருந்து வெளிவரத் தொடங்கியது. இதனைத் தொட ர்ந்து 2007இல் கோவையிலிருந்து மூன்றா வது பதிப்பும், 2010இல் திருச்சியிலிருந்து நான்காவது பதிப்பும் வெளிவரத் தொடங்கின. இப்போது, ஐந்தாவது பதிப்பு திருநெல்வேலியிலிருந்து துவங்குகிறது. தீக்கதிர், தன்னுடைய பயணம் முழு வதும் மக்களின் உணர்வுகளையும், மக்க ளின் குரலையும் எதிரொலிப்பதில் ஒரு முன் னோடியாக - மிகவும் பிரகாசமான பங்க ளிப்பினைச் செய்து வந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, பாஜகவும் அதன் அரசாங்கமும் ஊடகங்களின் மீது,
(இவற்றில் பெரும்பாலானவை கார்ப்பரேட்டு களால் நடத்தப்படுபவை) தன் கட்டுப்பாட்டை வலுப்படுத்தி இருக்கிறது. இதனைப் பயன் படுத்தி, தாங்கள் விரும்பும் செய்தியையே மக்களிடம் கொண்டு செல்வதற்கு அவற்றைப் பயன்படுத்தி வருகிறது. ஊட கங்களில் பெரும்பாலானவை விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்றன, சிறுபான்மை யினருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை பொதுவாக ‘கோடி மீடியா’ (‘Godi Media’) (கோயபல்ஸ்-மோடி மீடியா) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊடகங்களில் மக்களின் துன்ப துயரங்கள் குறித்து எதுவும் கூறப்படுவ தில்லை. அரசாங்கத்திற்கு எதிராகக் கூறப் படும் கருத்துக்கள் “தேச விரோதம்” என்று முத்திரை குத்தப்படுகின்றன. இத்தகைய இக்கட்டான காலத்தில் தீக்கதிர் நாளிதழ் ஜனநாயகத்தையும் மதச் சார்பின்மை விழுமியங்களையும் பாது காத்திடவும், மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்திடவும் முக்கியமான பங்கினை தொடர்ந்து வகித்திடும் என உறுதியாக நம்புகிறேன். இந்த இனிய தருணத்தில் தீக்கதிருட னும் அதன் அனைத்து வாசகர்களுட னும் தொடர்பினைக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.