states

img

பீகாரில் காந்தியின் சிலை உடைப்பு!

சாயத்துக்காக அவு ரிச்செடியை கட்டாய மாக பயிரிட வேண்டும் என்று உத்தரவிட்ட ஆங்கில அரசுக்கு எதி ராக மகாத்மா காந்தி,  1917-ஆம் ஆண்டு பீகார்  மாநிலம் சம்பாரனில் சத்தியாகிரக இயக்கத்தைத் தொடங்கி னார். அதை நினைவுகூரும் விதமாக இங்குள்ள ராட்டை பூங்காவில் காந்தி யின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை தற்போது இடித்துத் தள்ளப் பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு மதரீதி யிலான முழக்கங்கள் கேட்டதாகவும், எனவே மதச்சார்பு குழுக்கள்தான் இதற்கு காரணமாக இருக்க வேண்டும் பொது மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ள நிலை யில், சிலை புதிதாக நிறுவப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீசாத் கபில் அசோக் உறுதியளித்துள்ளார்.