states

img

சீன முன்னாள் பிரதமர் லீ கேகியாங் காலமானார்

பெய்ஜிங்,அக்.27- சீனக் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப் பினரும், முன்னாள் பிரதம ருமான  லீ கேகியாங் அக்டோ பர் 27 வெள்ளிக்கிழமை யன்று அதிகாலை  12:10 மணிக்கு  ஷாங்காயில் கால மானார். பெய்ஜிங் பல்கலைக்கழ கத்தில் சட்டம் படித்த லீ  கேகியாங், 1994 இல் பொரு ளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார் . சீனக் கம்யூ னிஸ்ட் கட்சி யூத் லீக்கின் வளாகச் செயலாளராகவும், 1998-2004  சீனாவின்  ஹெனான் மாகாணத்தின் ஆளுநராகவும் பின்னர் கட்சியின் செயலாளராகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்திருத்தத்திற்கான பணி யிலும்  தீவிரமாகச் செயல் பட்டவர். 2007ல் கட்சியின்  மத்தியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.