states

பி.எம். கேர்ஸ் நிதியில் ரூ.32,000 கோடி எங்கே?

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜய பாஸ்கர், தங்கமணி, வேலுமணி ஆகி யோரது வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்  கொண்டனர். ஆனால், இதுவரையில் ஒன்றிய பாஜக அரசு அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை. பி.எம். கேர்ஸ் என்ற பெயரில் கொரோனா காலக்கட்டத்தில் வசூல் செய்த  32 ஆயிரம் கோடிக்கு ஒன்றிய மோடி அரசு இது வரையில் கணக்கு காட்டவில்லை. கொரோனா  பெயரைச் சொல்லி கொள்ளையடித்த வர்கள்தான் பாசிச பாஜகவினர். ஆனால், எங்கள்  முதலமைச்சர் மோடியைப் போன்றவர் அல்ல.  கொரோனா காலத்தில் வசூலான நிதிக்கு வெள்ளையறிக்கை வெளியிட்டு சட்டமன்றத்தில் அனைத்தையும் வெளிப்படையாகச் சொன்ன வர். மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால் இந்தி யாவை காப்பாற்ற முடியாது. அதனை எதிர்க்கவே பெங்களூரில் 24 கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

- உதயநிதி ஸ்டாலின் 
தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர்