states

img

பெண் ராணுவ அதிகாரிகள் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பு

பெண் ராணுவ அதிகாரிகள் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பு

அரசியல் ஆதாயம் என விமர்சனம்

தனியார் தொலைக்காட்சி சேனலில் மூன்று பெண் ராணுவ அதிகாரிகள் முழு சீருடையுடன் பங்கேற்பது பாஜகவின் அரசியல் ஆதாயம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.  கவுன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியின் 17 ஆவது தொடரில் சுதந்திர தின சிறப்புப் பகுதியாக ஆபரேசன் சிந்தூர் நடந்தபோது முப்படைகளின் செய்தி தொடர்பாளர்களாக இருந்த மூன்று பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளனர்.  இதன்படி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்  கர்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங், கமாண்டர் பிரேர்னா தியோஸ்தலே ஆகியோரை அமிதாப் பச்சன் வரவேற்கும் வகையி லான முன்காட்சிகள் வெளியிடப் பட்டுள்ளன. பாகிஸ்தான் மீது இந்தியா நட த்திய ‘ஆபரேசன் சிந்தூர்’ தாக்குதல் பற்றிய முக்கிய தருணங்களை இந்த சிறப்பு நிகழ்ச்சியில் அந்த அதிகாரிகள் பகிர்ந்துகொள்வார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.  இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக பல மோசடிகளை அரங்கேற்றி வரும் நிலையில் தேசப் பற்றை அரசியல் ஆதாயத்துக்காக பாஜக பயன்படுத்தி வருகிறது என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் இந்திய ஆயுதப் படைகளுக்கு சில நெறி முறைகள், கண்ணியம் மற்றும் பெரும் மரியாதை உள்ளது. பாஜக தங்க ளின் தனிப்பட்ட லாபத்திற்காக அதை அழிக்கிறது எனவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.