பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்து, அரசின் அலுவல்கள் அனைத்தும் புதிய கட்டடத்திற்கு செவ்வாயன்று மாறின. புதிய நாடாளுமன்ற கட்ட டத்திற்கு மாறுவதற்கு முன்பாக, காலை 10 மணிக்கு பழைய நாடாளு மன்ற கட்டடத்தில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்குப் பிரியாவிடை அளிக்கும் வகையில், 11 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதில், தலைவர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் தங்களின் அனு பவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அரசியலமைப்பு ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்: கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே பேசுகையில், “அரசின் வெற்றி என்பது அரசி யலமைப்பு மதிப்பீடுகள் மற்றும் லட்சியங்களை நிலைநிறுத்துவதில் உள்ளது. அமைப்புகள் புனித மானவை மற்றும் வெற்றிக்கு இன்றி யமையாதவை என்ற கருத்து, அரசு மற்றும் வளர்ச்சியின் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும். நாடு முன்னேறும்போது நாம் நமது அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் நாடாளுமன்ற மரபுகளை காக்க உறுதியளிக்க வேண்டும். கட்சி பாகுபாடுகளை மறந்து நாட்டை கட்டியெழுப்ப, நாட்டை அரசியலமைப்பை ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுவே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு முயற்சிகள் தேசமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு நல்ல அடித்தளம் அமைத்துள்ளன” என்றார்.
புதிய இந்தியாவுக்காக புதிய நாடாளுமன்ற கட்டடம் : மோடி
“முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, அரசிய லமைப்பிற்கு பழைய நாடாளு மன்றக் கட்டடத்தில்தான் வடிவம் கொடுக்கப்பட்டது. பழைய நாடாளு மன்றக் கட்டடத்தில் 4 ஆயிரம் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது, புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக நாடாளு மன்றம் புதிய கட்டடத்துக்கு மாற்றப் பட்டுள்ளதாகவும், நவீன இந்தியா வை உருவாக்கியவர்களுக்கு மரி யாதை செய்யும் விதமாக பழைய நாடாளுமன்ற கட்டடத்துக்கு ‘அர சியலமைப்பு இல்லம்’ என பெய ரிடலாம்” என்றும் பரிந்துரைத்தார்.
பேரணியாக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பகல் 12.45 மணியளவில் பழைய நாடாளுமன்ற வளாகத்திலிருந்து புதிய கட்டடத்துக்கு குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங் களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலை வர் மல்லிகார்ஜூன கார்கே, மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாடாளுமன்ற விவ காரங்கள் துறை அமைச்சர் பிரக லாத் ஜோஷி உள்ளிட்டோர் முன்வரி சையில் அணிவகுக்க, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேரணியாக புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்தனர். புதிய கட்டடத்தில் துவங்கிய முதல் அமர்வு பகல் 1.15 மணியளவில் மக்கள வையில் தேசிய கீதம் இசைக்கப் பட்டு அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் முதல் கூட்டம் தொடங்கியது. அவர், அவையை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்து ழைக்க வேண்டும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி உரையாற்றினார். புதிய நாடாளுமன்றத்திற்கு உங்கள் அனைவரையும் இத யப்பூர்வமாக வரவேற்கிறேன் என கூறி தனது உரையைத் துவங்கிய மோடி, அமிர்த காலத்திற்கான விடியல் இது என்றும், விநாயகர் சதுர்த்தியில் புதிய மசோதாக்களை கொண்டு வருவது சிறப்பு வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.