states

img

ஜூலை 18 : குடியரசுத் தலைவர் தேர்தல்

புதுதில்லி, ஜூன் 9-  தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடி வடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறி விப்பு வியாழனன்று வெளியானது. இந்த  அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் புதுதில்லி யில் வெளியிட்டார்.   பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவாக உள்ள மொத்த வாக்கு மதிப்பு  10,86,431.  நாடாளுமன்ற உறுப்பினர் களின் வாக்கு மதிப்பு 5,43,200. சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு மதிப்பு 5,43,231. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 15-ஆம்  தேதி வெளியாகும். அன்றைய தினமே  வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசிநாள் ஜூன் 29 ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30-ஆம் தேதி நடைபெறும்.  மனுக்களை திரும்பப் பெறு வதற்கான கடைசி தேதி ஜூலை 2.  குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை  18-ஆம் தேதி நடைபெறும். ஜூலை 21-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். 

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர், இந்திய குடிமக னாகவும், 35 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும் என்பது விதி. மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு  மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக் கான மதிப்பு வேறுபடும். நாடாளு மன்றத்தின் இருஅவைகளிலும், நாட்டின் அனைத்து சட்டமன்றங்களிலும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.  இந்தத்  தேர்தலில் 776 நாடாளு மன்ற உறுப்பினர்கள் மற்றும் 4,033 சட்ட மன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 4,809 பேர் வாக்களிக்க உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு  மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக் கான மதிப்பு வேறுபடும் என்றார். தமிழகத்தில் தேர்தல் அதிகாரியாக சட்டமன்ற செயலாளர் கே.ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை குடியரசுத் தலைவர் களாக பதவி வகித்தவர்கள்: டாக்டர். இராஜேந்திர பிரசாத்-1950-1962, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்-1962-1967, ஜாகீர் உசேன் 1967-1969, வி.வி.கிரி-1969, முஹம்மது இதயதுல்லா-1969, வி. வி. கிரி 1969-1974, பக்ருதின் அலி அஹமது-1974-1977, பசப்பா தனப்பா ஜாட்டி-1977, நீலம் சஞ்சீவ ரெட்டி-1977-1982, ஜெயில் சிங்-1982-1987, இரா. வெங்கட்ராமன்-1987-1992, சங்கர் தயாள் சர்மா-1992-1997,     கே.ஆர்.நாராயணன்-1997-2002, ஏ.பி.ஜே. அப்துல் கலாம்-2002-2007, பிரதீபா பட்டீல்-2007-2012, பிராணப் முகர்ஜி-2012-2017,     ராம்நாத் கோவிந்த் (2017- தற்போது பதவியில் உள்ளார்)