குஜராத் மாநிலத்தில் 5 நாட்களுக்கு முன்பு வளர்ப்பு நாயின் நகம் உடலில் கீறியதில், ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியா உயிரிழந்தார். நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்ததுடன், வெறும் நகக் கீறல்தானே என்று அவர் அலட்சியமாக இருந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஏப்ரல் 30 முதல் இந்திய வான்வெளி யில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை அக்டோபர் 24 வரை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.
“பாஜக தோற்றதால் ஜிஎஸ்டி வரிகள் குறைந்துள்ளன”
பாஜக தோற்றதால் ஜிஎஸ்டி வரிகள் குறைந்துள்ளன என திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “வங்காள மொழியில் ஒரு பழமொழி உண்டு. பூனை ஆபத்தில் இருக்கும் வரை மரத்தில் ஏறாது என்பது அந்த பழமொழி. அதே போல தான் பாஜக என்ற பூனையும் உள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக 60 இடங்களுக்கு மேல் இழந்தது. அதன் எண்ணிக்கையை 303 லிருந்து 240 ஆகக் குறைத்தது. அதனால்தான் ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பாஜகவின் பலம் 200 ஆகக் குறைந்திருந்தால், விகிதம் 9 சதவீதமாகக் குறைந்திருக்கும். பாஜக பூஜ்ஜிய இடங்களுடன் தன்னைக் கண்ட றிந்தால், ஜிஎஸ்டி பூஜ்ஜியமாகிவிடும். இதன்மூலம் பாஜக தோற்றால் வரிகள் குறையும் என்பது தெளிவாகிறது. பாஜக வெற்றி பெற்றால் வரிகள் உயரும்.கடந்த 8 ஆண்டுகளில் ஜிஎஸ்டி விகிதங்கள் ஒருபோதும் குறைய வில்லை. மேலும் சாமானிய மக்களு க்கு எந்த நிவாரணமும் வழங்கப்பட வில்லை. இதுதான் ஜிஎஸ்டி அரசியல்” என அவர் கூறியுள்ளார்.