states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஐ கேரள மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம்

கேரளாவில் எஸ்ஐஆர் பணிக்குப் பின்பு வெளியாக உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை தீவிரமாக ஆய்வு செய்வோம். வாக்காளர் பட்டியலில் எந்தவிதமான முறைகேடுகளோ அல்லது திருத்தங்களோ செய்யப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் ராய்

ஏஐ மாநாட்டில் சீனாவின் ரோபோ நாய், தங்கள் உருவாக்கம் என்று ‘கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தால்’ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியின் கீழ், நாடு தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவதோடு, புகழுக்கும் மீண்டும் மீண்டும் களங்கம் விளைவிக்கப்படுகிறது.

திரிணாமுல் மூத்த தலைவர் ஜெய்பிரகாஷ் மஜும்தார்

தேர்தல் ஆணையத்தின் அடிப்படை கடமை என்ன, அவர்களின் செயல்திட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் பலமுறை நினைவூட்டியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் முன் பல நல்ல விஷயங்களைச் சொல்லும் தேர்தல் ஆணையம், களத்திற்கு வந்தவுடன் மீண்டும் பாஜகவின் கட்டளைகளுக்கு ஏற்பவே செயல்படுகிறது.

பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக்

ஒடிசா பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டைப் பற்றி என்ன சொல்ல முடியும்? பட்ஜெட்டிற்காக கொண்டு வரப்பட்ட காகிதக் கட்டு பெரியது. ஆனால் அறிவிப்பு மிகச் சிறியது. அதிலும் மக்களுக்காக ஒன்றுமில்லை. ஒடிசா பாஜக அரசின் பட்ஜெட் ஒன்றுமில்லாத சமையலறையில் உள்ள முழு மெனுவைப் (ஆர்டர் செய்யும் அட்டை) போலத் தெரிகிறது.