states

img

ராணுவ மரியாதையுடன் முப்படை தளபதி பிபின் ராவத் உடல் தகனம்  

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.  

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் பலியாகினர். பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இன்று காலை டெல்லி காமராஜர் மார்க் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு  உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  பின்னர் கன்டோன்மென்ட் மயானத்தில் பிபின் ராவத் மற்றும்  மனைவி மதுலிகா ராவத்  உடல் தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டது. பிபின் ராவத் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி அகற்றி அவரது மகளிடம் முறைப்படி ராணுவத்தினர் ஒப்படைத்தனர்.

பின்னர்  தகன மேடையில் பிபின் ராவத் உடலுக்கு மற்றும் தாய் மதுலிகாவிற்கும் அவரது மகள்கள் இறுதி சடங்குகளை செய்தனர். தொடர்ந்து ஒரே தகன மேடையில் பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் வைக்கப்பட்டன. அதன் பின்னர் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடலுக்கு மகள்கள்  தீ மூட்டினர்.      

அப்போது  முழு ராணுவ மரியாதையுடன் 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க 800 வீரர்களின் மரியாதையுடன் பிபின்ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது.   

;