states

img

மேற்கு வங்கத்தில் 60 லட்சம் வாக்காளர்களை நீக்கக் கூடாது தேர்தல் ஆணையத்திடம் சிபிஎம் மாநிலச் செயலாளர் முகமது சலீம் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் 60 லட்சம் வாக்காளர்களை நீக்கக் கூடாது தேர்தல் ஆணையத்திடம் சிபிஎம் மாநிலச் செயலாளர் முகமது சலீம் கோரிக்கை

கொல்கத்தா மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்தியத் தேர்தல் ஆணையம் கொல்கத்தாவில் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த ஆய்வுக்கு இடையே திங்களன்று அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்ற மாநிலச் செயலா ளர் முகமது சலீம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதில்,“மேற்கு வங்கத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு 58.20 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேலும் சுமார் 60 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் சட்ட ரீதியான பரிசீலனையில் (விசாரணையில்) உள்ளது. இந்த 60 லட்சம் பேரின் குடியு ரிமை அல்லது தகுதி குறித்த முடிவுகள் எடுக் கப்படாமல், அவர்களைப் பட்டியலில் இருந்து  நீக்கியோ அல்லது தற்காலிகமாகவோ வைத்துத் தேர்தலை நடத்தக்கூடாது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது அரசியல் சாசன முக்கியத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். வாக்காளர்களை ஒரு “எதிரியைப் போல” நடத்தாமல், நாட்டின் குடிமக்களாகக் கருதி அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும். எஸ்ஐஆர் செயல்முறையின் போது முறை கேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையம் வெளிப்படை யாக அறிவிக்க வேண்டும். தரவு முரண்பாடுகள் காரணமாகக் குறிக்கப்பட்ட வாக்காளர்களின் முழுப் பட்டியலையும் பொதுவெளியில் வெளி யிட வேண்டும். மேற்கு வங்கத்தில் வன்முறை யற்ற மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய, தேர்தலை ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக மட்டுமே நடத்த வேண்டும்” என முகமது சலீம் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தார்.