states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.கே.ஷைலஜா

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்விக்காக நடிகர் சூர்யா தொடங்கிய அகரம் அறக்கட்டளையின் பணி பாராட்டத்தக்கது. படித்த தலைமுறை முற்போக்கான சமூகத்தின் அடித்தளமாகவும் செல்வமாகவும் அமையும். அதற்கான முயற்சியில் ஈடுபட்ட நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் ஏன் எதிர்க்கட்சிகளுக்கு மறுக்கப்படுகிறது? சிசிடிவி பதிவுகளை யாருடைய உத்தரவின்பேரில் தேர்தல் ஆணையம் அழிக்கிறது? போலி வாக்குகளும், வாக்காளர் பட்டியல் முறைகேடும் ஏன்? எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி அச்சுறுத்துவது ஏன்? பாஜகவின் முகவராக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா?

ஊடக உண்மை சரிபார்ப்பாளர் முகமது ஜுபைர்

பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த தீபக் குமார் சைனி என்பவர், காவல்துறையின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சிவன் உடையில் சாமியாராக சுற்றிக் கொண்டிருந்துள்ளார். தற்போது  ஹரித்வாரில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சமாஜ்வாதி செய்தி தொடர்பாளர் அமீக் ஜமெய்

தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுவதில் ஈடுபட்டால் இந்த நாட்டின் நிலைமை என்னவாகும்? மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த கவலைகளை எழுப்பியுள்ளது போல, உத்தரப்பிரதேச தேர்தல்களின் போது அகிலேஷும் இதே போன்ற சிக்கல்களை எழுப்பினார். தேர்தல் ஆணையத்தின் மீது நம்பகத்தன்மை இழந்தால் நாட்டில் சர்வாதிகாரம் ஏற்பட வாய்ப்புள்ளது.