கடந்த மக்களவை தேர்த லில் தென்னிந்திய மாநி லங்களில் ஒன்றான கர் நாடகாவில் உள்ள 28 மக்கள வைத் தொகுதிகளில் 25 தொகுதி களை பாஜக கைப்பற்றியது. ஆனால் இம்முறை பாஜக 15 தொகுதிகளை கூட வெல்வது கடினம் என புதிய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி யுள்ளது கர்நாடக மாநிலத்தின் பிர பல ஊடகமான “ஈடினா” மாநி லம் முழுவதும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 5 வரை வீடு, வீடாகச் சென்று 50 ஆயிரத்து 678 பேரி டம் மக்களவை தேர்தல் தொடர் பாக கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பு முடி வில் மொத்த வாக்குகளில் காங்கிரஸ் கட்சிக்கு 43.77 விழுக் காடும், பாஜக-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு 32.35 விழுக்காடும் கிடைக்கும். அதா வது மொத்தமுள்ள 28 தொகுதி களில் காங்கிரசுக்கு 17 மற்றும் பாஜக கூட்டணிக்கு 11 தொகுதி களில் வெற்றி இருக்கும். இதில் ஏழு தொகுதிகளில் கடுமையான போட்டியிருக்கும் என்றும் கூறப் பட்டுள்ளது. இதனால் காங்கி ரஸ் கட்சி 17 இடங்களுக்கு கூடு தலான தொகுதிகளை கைப்பற் றும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்த லின்போது பல பெரிய ஊடகங் கள் மீண்டும் பாஜக வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்த சூழ லில் “ஈடினா” ஊடகம் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் கருத்து தெரிவித்தது என்பது குறிப்பிடத் தக்கது.
மோடி கூறியதை கருத்துக் கணிப்பாக கூறும் “கோடி மீடியா”
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகி யோர் தொடக்கத்தில் 370 தொகுதிகளை பாஜக கைப்பற் றும் என கூறினர். அப்போது பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் “கோடி மீடியா” ஊடகங்கள் பாஜக 370 இடங்களை கைப் பற்றும் என கருத்துக்கணிப்பை வெளியிட்டன. இப்பொழுது மோடி மற்றும் அமித் ஷா பாஜக 400 இடங்களை வெல்லும் என கூறுகின்றனர். இப்பொழுதும் “கோடி மீடியா” ஊட கங்கள் 400 இடங்களை கைப்பற்றி மோடி மீண்டும் பிரதமரா வார் என பாஜகவிற்கு ஆதரவாக கூறி கருத்துக்கணிப்பை தலைப்புச் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. ஆனால் உண்மை நிலவரங்கள் ஒரு சில முதுகெலும்புள்ள ஊட கங்களில் மட்டுமே வெளியாகி வருகிறது. அதில் பாஜக 210 இடங்களை தாண்டுவது சிரமம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.