காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தா
பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் வெறும் 7 பேர்தான் மதம் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி இருக்கும் போது எதற்கு பாஜகவினர் (பிரக்யா சிங்) இவ்வளவு கூச்சல் போடுகின்றனர். வெறுப்புணர்வை பரப்பி வருகின்றனர்.
ஊடகவியலாளர் அர்பா ஷெர்வானி
பீகாரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, மோடியின் பாஜக, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. இந்தியாவின் தேர்தல் ஆணையம் இறந்து விட்டதா? அல்லது நவம்பர் 14ஆம் தேதி (பீகார் தேர்தல் முடிவு நாள்) பாஜகவின் வெற்றியை அறிவிப்பதற்கு மட்டும் உயிர் பெறுமா?
மூத்த பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர்
ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் மீண்டும் முஸ்லிம் சமூகத்தின் மீதே கடுமையான அளவில் வெறுப்புப் பேச்சை கக்கியுள்ளார். குறிப்பாக அவமதிப்பான சொற்களையும் பயன்படுத்துகிறார். ஒருவிதத்தில் முஸ்லிம் மக்களுக்கு அவர் மிரட்டலும் விடுத்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் அபிஷேக்
ஒரு ஊடக விவாதத்தில் 7 பேரைக் கொலை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட சம்ராட் சவுத்ரியை, பாஜக பீகாரின் துணை முதல்வராக நியமித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “கோடி மீடியா” ஊடகத்தைச் சேர்ந்த சித்ரா திரிபாதி,’மக்கள் தான் எங்கள் கட்சியை தேர்ந்தெடுக்கிறார்கள்” என்று அலட்சியமாகக் கூறியுள்ளார். இதற்கு நாம் என்ன சொல்வது?
