மோடியின் பாஜக அரசை ஆட்சி அதிகாரத் தில் இருந்து அகற்ற 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந் துள்ள “இந்தியா” கூட்டணியில் தற் போது தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரப்பிர தேசம், தில்லி, ஹரியானா, குஜ ராத், கோவா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் “இந்தியா” கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது. மேற்கு வங்கம், தமிழ்நாடு, மகா ராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்க ளில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஆந் திர மாநிலத்திலும் “இந்தியா” கூட்ட ணியின் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. வெள்ளியன்று விஜயவாடா வில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான ஆந்திர ரத்னா பவனில், பிரதேச காங்கிரஸ் தலை வர் ஒய்.எஸ். சர்மிளா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வி.சீனிவாசராவ், இந் திய கம்யூனிஸ்ட் சார்பில் அக்கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.ராமகிருஷ்ணா ஆகியோர் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர் தலுக்கான கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,”மத்தியில் பாஜக மற்றும் மாநிலத்தில் ஒய்எஸ்ஆர்சியின் மக்கள் விரோ தக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியம் உள் ளது. இதுபோன்ற தீய சக்திகளை தோற்கடிக்க இடதுசாரி கட்சிகளு டன் காங்கிரஸ் கைகோர்த்துள் ளது. வரவிருக்கும் மக்களவை, சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் - இடது சாரி கூட்டணி, “இந்தியா” கூட்டணி யாக ஆந்திர மாநிலத்தில் களமி றங்கும்” என அவர் கூறினார். பிப்.26 - தொகுதி பங்கீடு வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி ஆந்திராவின் அனந்தபூரில் காங்கி ரஸ் சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லி கார்ஜுன கார்கே கலந்து கொள்ள உள்ள நிலையில், பொதுக்கூட்டத் தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்க வேண்டும் என ஒய்.எஸ்.சர்மிளா அழைப்பு விடுத்துள்ளார். பொதுக்கூட்டம் முடிந்த பிறகு மக்களவை, சட்டமன்ற தேர்தலுக் கான தொகுதி பங்கீடு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோ சிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் பாஜகவிற்கு 1 சதவீத வாக்குகள் கூட இல்லை: சிபிஎம்
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி பேச்சு முடிவுக்கு பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநிலச் செய லாளர் வி. சீனிவாச ராவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகை யில், “ஆந்திர மாநிலத்தில் 1 சதவீத வாக்குகள் கூட இல்லாத பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர்சிபியின் திறமையின்மை யால் ஆந்திரப் பிரதேச மக்களை மறைமுகமாக ஆட்சி செய்கிறது. “ஜெகன்-பாபு-பவன் (ஆளுநர் அலுவலகம்)” மூவரும் பாஜகவின் கைகளில் ஆந்திராவை ஒப்படைத்து, மக்களின் நலன்களை ஒன்றிய அரசிடம் அடகு வைத்துள்ளனர். முதல்வர் ஜெகன் மோகன் மக்களின் நிதிப்பிரச்சனைகளை சற்றும் பொருட்படுத்தாமல் கண்மூடித்தன மாக கடன் வாங்கி ஆந்திராவை திவால் நிலைக்குத் தள்ளியுள்ளார்” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.