states

img

இந்தியில் போட்டித் தேர்வு கர்நாடகா அரசு எதிர்ப்பு

தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடை பெற்று வரு கிறது. பள்ளி களுக்கு இலவச மின்சாரம் குறித்த அறிவிப்பை  அம்மாநில முதல்வர் சித்த ராமையா வெளியிட்டுள் ளார். இதுதொடர்பாக டுவிட்டர் எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: “கர்நாடகாவில் உள்ள அனைத்து  அரசுப் பள்ளிகளுக்கும் இலவச மின்சா ரம் மற்றும் குடிநீர் வழங்கப்படும். இது  கன்னட வழிப் பள்ளிகளில் உள்ள உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். முக்கியமாக வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளை இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற  ஒன்றிய அரசின் முடிவை நாங்கள் எதிர்க்கிறோம். இதுபோன்ற தேர்வு களை கன்னட மொழியிலும் நடத்த வேண்  டும். இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை ஏற்கெனவே வலியுறுத்தியுள் ளேன். தேவைப்பட்டால் மீண்டும் ஒரு  முறை ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுது வேன்” எனக் கூறினார்.  கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடும் இந்தியில் போட்டித் தேர்வு நடத்து வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.