states

img

உத்தரகண்டில் மேகவெடிப்பு  10 பேர் பலி

உத்தரகண்டில் மேகவெடிப்பு  10 பேர் பலி

இமயமலைச்சாரலில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் தொ டர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. டேராடூன் மற்றும் மேல் மலைப் பகுதியில் அதீத அளவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக திங்கள்கிழமை இரவு முதல் பெய்த தொ டர்ச்சியான கனமழைக்கு இடையே சகஸ்ரதாரா பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் தாம்சா நதி நிரம்பி வழிந்து, சகஸ்ரதாரா பகுதியே வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது.  இந்த மேகவெடிப்பு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 பேரை காணவில்லை. மேலும் வெள்ளத்தில் உணவகங்கள், கடைகள், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வணிக நிறுவனங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளும் சேதமடை ந்துள்ளன. ஆங்காங்கே  நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதுவரை 300 முதல் 400 பேர் வரை பாதுகாப்பாக வெளி யேற்றப்பட்டுள்ளனர். காணாமல் போன வர்களை தேடும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. டேராடூனிலும்... இதே போல டேராடூனிலும் மிதமான அளவில் கனமழை பெய்து வருகிறது. டேராடூன் - ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பன் வேலி மற்றும் உத்தரகண்ட் பல்மருத்துவக் கல்லூரிக்கு அருகிலுள்ள பாலமும் சேதமடைந்துள்ளதாக மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.செவ்வாய்க்கிழ மை காலை நிலவரப்படி அந்த பகுதி யில் 2 பேரை காணவில்லை என செய்தி கள் வெளியாகியுள்ளன.