states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

எங்கள் அமைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் கூறும் கருத்துக்கள் ஊடகத்தில் மட்டுமல்லாமல், கீழமை நீதிமன்றங்கள் வரை பரவுவதாக அமலாக்கத்துறை கூறுகிறது. உச்சநீதிமன்றம் தனி நபரையோ அல்லது அமைப்பையோ தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. மாறாக வழக்கின் தன்மையை பொறுத்தே உச்சநீதிமன்றம் கருத்துக்களை கூறுகிறது.

ஊடகவியலாளர் ராணா அய்யூப்

குஜராத் கலவரத்தில் பாஜக மற்றும் மோடியின் பங்கை அம்பலப்படுத்தி நான் எழுதிய புத்தகத்தின் பெயர் குஜராத் பைல்ஸ் (Gujarat Files). அதற்கு பிறகுதான் நிறைய பாஜக பிரச்சாரப் படங்கள் “பைல்ஸ் (Files)” என்ற வார்த்தையை கொண்டு வெளியாகி வருகின்றன. புத்தகம் என்றாலே பாஜகவுக்கு ஏற்படுத்திய பதற்றமா என தெரியவில்லை. 

திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா

தலைமை தேர்தல் ஆணையர் அவர்களே! ஊடக சந்திப்பில் நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் அபத்தமாகவும் நகைச்சுவையாகவும் மட்டுமே இருந்தன. தயவுசெய்து பாஜகவினருக்கு இருக்கும் அறிவுதான் எங்களுக்கும் (எதிர்க்கட்சிகளுக்கும்) இருக்குமென நினைக்க வேண்டாம்.

திரைக்கலைஞர் திவ்யா

வாக்குத் திருட்டு நடைபெற்று வருவதாக ராகுல்காந்தி கூறுவது மிகச் சரியானது. ஆனால் தேர்தல் ஆணையர்களின் செய்தியாளர் சந்திப்பு கேலிக்கூத்தானதாக உள்ளது. எந்த கேள்விகளுக்கும் அவர்கள் முறையாக பதிலளிக்கவே இல்லை. ஏன் இத்தனை போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள்?