states

img

கடன் தொல்லையால் மகனை விற்ற தந்தை?

பாஜக ஆளும் உ.பி.,யில் கொடூரம்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதி யைச் சேர்ந்த ஒருவர் ராட்  வேஸ் பேருந்து நிலையத்தில் “கடன்  தொல்லையால் என் மகன் விற்ப னைக்கு இருக்கிறான், அவனை விற்க  விரும்புகிறேன்” என்று ஒரு சிறிய அட்  டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு தனது மனைவி, மகன், மகள் உடன்  பல மணிநேரமாக அமர்ந்து இருந்தார்.  கடனுக்காக மகனை விற்பனைக்கு அறிவித்த விவகாரம் நாடு முழுவதும்  மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அலிகார் நகர காவல்துறை விசாரணை  மேற்கொண்டதில் மகனை விற்ப னைக்கு அறிவித்ததாக கூறப்படும் நபர்  அவரது உறவினரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். பணத்தைத்  திருப்பித் தராததால் கடன் கொடுத்த உறவினர்கள் தகராறு செய்துள்ளனர். தொடர்ந்து வெள்ளியன்று இரு தரப்பி னரின் ஒப்புதலுடன் இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டது. மகனை விற்றுவிட்டாரா? மகனை விற்பனைக்கு அறிவித்த நபர், தனது மகனை ரூ.6 லட்சம் முதல்  ரூ.8 லட்சத்திற்கு விற்றதாக சமூக  வலைத்தளங்களில் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் அலிகார்  போலீசார் விற்பனைக்கு அறிவித்த தாக மட்டுமே கூறியுள்ளனர். மேலும்  கடன் பிரச்சனையை தீர்த்து வைத்து விட்டதாக போலீசார் கூறினாலும், விற்ப னைக்கு அறிவித்தவரின் மகன் எங்கே  இருக்கிறார்? அவரது குடும்ப உறுப்பின ருடன்தான் இருக்கிறானா? என்பது  பற்றியும் அலிகார் போலீசார் எந்த  விளக்கமும் அளிக்கவில்லை என்ப தால் இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்  சையை ஏற்படுத்தியுள்ளது.  சமாஜ்வாதி கண்டனம் “கடன் தொல்லையால் தன் மகனை  விற்பனைக்கு அறிவித்து, ஒரு தந்தை  கழுத்தில் விளம்பர போர்டுடன் கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது பாஜகவின் அமிர்தகாலம். இந்த  படம் மாநிலம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி,  ஒட்டுமொத்த நாட்டிற்கும் களங்கம் ஏற்படுத்துகிறது” என சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் கொடுமை கடன்தொல்லையால்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  7 பேர் தற்கொலை

பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான குஜராத்தின் சூரத் பகுதியின் பாலன்பூர் பாட்டியாவில் பர்னிச்சர் தொழில் செய்து வரும் மகேஷ் சோலங்கி (35) சித்தேஷ்வர் அடுக்குமாடி குடியிருப்பு வளா கத்தில் உள்ள ஜி1 பிளாட்டில் வசித்து வருகிறார். இவரது பிளாட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தபோது அதாஜன் சரக காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே  சென்று பார்த்த பொழுது,  மகேஷ் சோலங்கி அவரது மனைவி ரீட்டா (32), மகள்கள் திஷா  (7), காவ்யா (5), மகன் குஷால் (3) மற்றும் பெற்றோரான காந்திலால் சோலங்கி (65), ஷோப்னா (60) ஆகியோர் பிணமாக கிடந்த னர். முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லை யால் மகேஷ் சோலங்கி தனது குடும்பத்தினருடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.