states

img

புதிய நாடாளுமன்ற மேற்கூரையில் வெண்கல தேசிய சின்னம்

புதுதில்லி, ஜூலை 11-  நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று திறந்து வைத்தார்.  மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில் இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.971 கோடி மதிப்பில் 62,000 சதுர மீட்டரில் முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.  இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் உயரமும் 9.5 டன் எடையும் உடைய வெண்கலத்திலான தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று திறந்து வைத்தார். தேசிய சின்னத்தை தாங்கி பிடிப்பதற்காக 6,500 கிலோ எடையில் ஸ்டீலிலான அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.