தில்லி செங்கோட்டைக்கு குண்டுவெடிப்பு எச்சரிக்கை
தேசிய தலைநகர் தில்லியில் உள்ள செங்கோட்டைப் பகுதி யைச் சுற்றி குண்டுவெடிப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சனிக்கிழமை காலை முதல் மத்திய மற்றும் வடக்கு தில்லியில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாந்தினி சவுக் பகுதி களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. லஷ்கர்-இ-தொய்பா பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் தடை செய்யப்பட்ட பயங்கர வாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா இந்தச் சதியின் பின்னணியில் இருப்பதாக உளவுத்துறை தகவலில் கூறப்பட்டுள் ளன. இந்தியாவில் ஒரு பெரிய தாக்கு தலை நடத்தும் முயற்சியின் ஒரு பகு தியாக, தில்லியில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் (ஐஇடி) மூலம் தாக்குதல் நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ள தாக உளவுத்துறை மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன.
