கோவா சட்டப்பேர வை தேர்தலில் நட்சத்திர வேட்பாளராக இருந்தவர் அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலை வருமான பிரதாப்சிங் ரானே ஆவார். பொரியம் தொகுதி எம்எல்ஏ-வாக 11 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரானே-வை, டிசம்பர் மாதமே காங்கிரஸ் மீண்டும் தனது வேட்பாளராக அறிவித்து விட்டது. இதனிடையே ரானேவின் மருமகள் தேவியா-வை பாஜக தனது வேட்பாள ராக அறிவிக்க, எதிர்பாராத விதமாக, பிரதாப்சிங் ரானே போட்டியிலிருந்து விலகியுள்ளார்.