states

img

பீகாரில் ஆட்டம் காணும் பாஜக - நிதிஷ் கூட்டணி

பச்சோந்தி அரசியலுக்கு புகழ் பெற்ற ஐக்கிய ஜனதாதள தலை வர் நிதிஷ் குமார், மோடி அரசின் மிரட்டலுக்கு பயந்து, காங்கிரஸ் - ஆர்ஜேடி - இடதுசாரிகளின் “மகா” கூட்டணி மற்றும் தேசிய அளவிலான “இந்தியா” கூட்டணியில் இருந்து ஓட்டம் பிடித்து மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து முதல்வரானார்.  ஐக்கிய ஜனதாதளம் - காங்கிரஸ் - ஆர்ஜேடி - இடதுசாரிகள் ஆகிய கட்சிகள்  அடங்கிய “மகா” கூட்டணி ஆட்சியில் இருந்த பொழுது ஆர்ஜேடி தலைவரும், துணை முதல்வருமான தேஜஸ்வி வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். மகா கூட்டணி மேலும் பல பலன் களை மக்களுக்கு அளிக்கும் என பீகார் மக்கள் எதிர்பார்த்த நிலையில், நிதிஷ் குமார் பாஜக பக்கம் தாவி மாநில மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினார். இந்த விவகாரம் பீகார் மக்களிடையே கடும்  அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இதன் கோபத்தை ராகுல் மற்றும் தேஜஸ்வியின் யாத்திரையில் பங்கேற்று வெளிப்படுத்தினர். அதாவது இரண்டு யாத்திரைகளும் பிரம்மாண்ட மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றன. தற்போது நடைபெற்று வரும் “இந்தியா” கூட்டணியின் பிரச்சாரங்களுக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். பீகாரில் “இந்தியா” கூட்டணிக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவு அலை, தேசிய  ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு  பிரச்சனை ஆகியவற்றால் பீகாரில் பாஜக  கூட்டணி ஆட்டம் கண்டுள்ளது.  பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதியில் “இந்தியா” கூட்டணி கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என தகவல் வெளியாகி யுள்ளது.