கொல்கத்தா, டிச.7- மேற்கு வங்கத்தை இரண்டா கப் பிரித்து, டார்ஜிலிங்கை மைய மாகக் கொண்டு தனிமாநிலம் அமைக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ பிஷ்ணு பிரசாத் சர்மா கலகத்தை ஆரம்பித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதி யுள்ளார். அதில், தனிமாநிலக் கோரிக்கை தொடர்பாக நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என ஏற்கெனவே பாஜக தலைமை வாக்குறுதி அளித்துள்ளதை அவர் நினைவுபடுத்தியுள்ளார். தனது கடிதம் தொடர்பாக பிஷ்ணு பிரசாத் சர்மா மேலும் தெரிவித்திருப்பதாவது: “மாநில உரிமை தொடர்பாக பல வன்முறைகளை கண்ட டார்ஜிலிங் மலைப்பகுதி மக்கள் மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்ப வில்லை.
இதுதொடர்பாக நிரந் தர அரசியல் தீர்வு காணப்படும் என்று 2019 மக்களவைத் தேர் தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று நான் கட்சியின் தேசியத் தலைவருக்குக் கடிதம் எழுதினேன். இந்த வாக்குறுதி காரணமாகவே பொதுமக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர். மலைப் பகுதியில் வாழும் மக் களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு என்பது மேற்கு வங்கத்தின் பிடி யில் இருந்து விடுபடுவதாகும். அது ஒரு தனி மாநிலமாகவோ அல்லது யூனியன் பிரதேசமா கவோ இருக்கலாம். எனது இந்த கோரிக்கைக்கும் மேற்கு வங்க பாஜக தலைவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், மலைப் பகுதியில் வாழும் மக்களுடன் உட்கார்ந்து பேசி தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும்.” இவ்வாறு பிஷ்ணு பிரசாத் சர்மா கூறியுள்ளார். அலிபுர்து வார் பாஜக எம்.பி. ஜான் பர்லா வும் சில மாதங்களுக்கு முன்பு, இதே கோரிக்கையை வலி யுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.