states

img

திரிபுராவில் பாஜக அரசு தோல்வியடைந்து விட்டது தர்மநகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சிபிஎம் தலைவர்கள் குற்றச்சாட்டு

திரிபுராவில் பாஜக அரசு தோல்வியடைந்து விட்டது தர்மநகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சிபிஎம் தலைவர்கள் குற்றச்சாட்டு

அகர்தலா திரிபுராவில் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது என தர்மநகர் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சிபிஎம் தலைவர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். திரிபுரா மாநிலத்தில் காலியாக உள்ள தர்மநகர் சட்டமன்றத் தொ குதிக்கு ஏப்., 9 அன்று இடைத்தேர் தல் நடைபெறுகிறது. இந்த தேர்த லில் இடது முன்னணி வேட்பாள ராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அமிதவ தத்தா போட்டியிடு கிறார். இந்நிலையில், தர்மநகரில் உள்ள தீனாநாத் வித்யாமந்திர் மைதானத்தில் வெள்ளியன்று அமிதவ தத்தாவிற்கு ஆதரவாக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடை பெற்றது. எதிர்க்கட்சித் தலைவ ரும், சிபிஎம் திரிபுரா மாநிலச் செய லாளருமான ஜிதேந்திர சவுத்ரி, வேட்பாளர் அமிதவ தத்தா, சட்ட மன்ற உறுப்பினர்கள்  இஸ்லாம் உதீன் மற்றும் சைலேந்திர சந்திர நாத், மத்தியக் குழு உறுப்பினர் கிருஷ்ணா ரக்சித் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில், கடந்த எட்டு ஆண்டுகால பாஜக அரசின் செயல்பாடுகளை தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். வளர்ச்சி குறித்துப் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், பொதுமக்களின் எதிர் பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதில் அரசு தோல்வியடைந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். ஊழல், வாரிசு அரசியல் மற்றும் அழிவு அரசியல் ஆகியவற்றில் திரிபுரா பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக திரிபுரா சிபிஎம் தலைவர்கள் குற்றம் சாட்டினர். அதே போல மாநிலத்தில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து சிபிஎம் தலை வர்கள் தங்களின் ஆழ்ந்த கவ லையை வெளிப்படுத்தினர்.