‘அசாமில் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் பாஜக’
அசாமில் தேவையற்ற சர்ச்சை களை உருவாக்கி வருவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா குற்றம்சாட்டியுள்ளார். கவுகாத்தியில் நடைபெற்ற அசாம் ஐக்கிய முன்னணி (காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி) பிரச்சா ரத்துக்கு இடையே அவர் மேலும் கூறு கையில்,“அசாம் சட்டமன்றத் தேர்தலில் பாஜக எவ்வித அடிப்படையும் இல்லாத சர்ச்சைகளை உருவாக்கி, அதன் மூலம் மக்களின் கவனத்தை முக்கியப் பிரச்ச னைகளிலிருந்து திசைதிருப்ப முயல்கி றது. மத்தியில் 12 ஆண்டுகளாக ஆட்சி யில் இருக்கும் பிரதமர் மோடி, காங்கி ரஸ் ‘வகுப்புவாத வன்முறை மசோதா வை’ கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறுவது மிகவும் விசித்திரமானது. அசாமி லும் கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவே ஆட்சி செய்கிறது. ஆனால், அவர்கள் தங்களின் தோல்விகளை மறைக்கப் பழைய வரலாற்றைத் தவறாகச் சித்த ரித்து வருகிறார்கள். ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவோ ‘ஊடுருவல்காரர்களை’ எதிர்ப்பதாகவும், ‘உள்நாட்டு அசாம் முஸ்லிம்களை’ எதிர்க்கவில்லை என்றும் கூறுவது மக்களைப் பிளவுபடுத்தும் தந்திரம்” என அவர் குற்றம்சாட்டினார்.
