states

img

ஸ்டார்ட்அப் துறையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக கேரளாவுக்கு விருது

திருவனந்தபுரம், ஜுலை 5- ஸ்டார்ட் அப் துறையில் சிறந்த செயல் பாட்டிற்காக ஒன்றிய அரசின் விருது தொடர்ந்து மூன்றாவது முறையாக கேர ளாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. வலுவான ஸ்டார்ட்அப் சூழலை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளித்ததன் காரணமாக, 2021 ஆம் ஆண்டிற்கான மாநில ஸ்டார்ட் அப் தரவரிசையில் கேரளாவுக்கு சிறந்த செயல்திறன் விருது வழங்கப்பட்டுள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் விருதுகளை அறிவித்தார். மூன்றாவது பதிப்பானது தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) ஸ்டார்ட்அப் இந்தியா, ஒன்றிய அரசின்  தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தால் கூட்டாகத் தொடங்கப்பட்டது. கேரள ஸ்டார்ட்அப் மிஷன் (கேஎஸ்யுஎம்) அதி காரிகள் இந்த விருதை அமைச்சர் பியூஷ்  கோயலிடம் இருந்து மாநில அரசின் சார்  பில் பெற்றுக்கொண்டனர்.

கேஎஸ்யுஎம் முதன்மை அதிகாரி ஜான் எம் தாமஸ் கூறுகையில், இது மாநில அர சுக்கும் ஸ்டார்ட்அப் துறையில் பங்குதாரர்  களுக்கும் பெருமையான தருணம். இந்த விருது மாநிலத்தில் உள்ள சிறந்த  ஸ்டார்ட் அப்கள் மற்றும் வலுவான ஸ்டார்ட்  அப் சூழலின் பிரதிபலிப்பாகும் என்று சுட்டிக்காட்டினார். கேரளாவைத் தவிர, மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிர தேசம் ஆகியவை சிறந்த செயல்திறன் விருதை பகிர்ந்து கொண்டன. தயாரிப்பு, வடிவமைப்பு, மேம்பாட்டு ஆகிய நடவடிக்கைகளுக்கான டிஜிட்டல் மையமாக கேஎஸ்யுஎம் போன்றவற்றின் பணிகளை மாநில அரசு வளர்ப்பதை நிபு ணர் குழு பாராட்டியது. உள்ளூர் மொழி களில் தொடர்பு கொண்டு ஸ்டார்ட்-அப்  களுக்கு அரசு ஆதரவு அளித்து வரு கிறது. ஸ்டார்ட்அப்களை வலுப்படுத்த உயர்கல்வித் துறை, காவல் துறை, விளை யாட்டு மற்றும் இளைஞர் விவகார அலுவல கம் என 10க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளு டன் மாநில அரசு கைகோர்த்துள்ளது. திறமையில் வழிகாட்டியாகவும், கொள்முதலில் சிறந்து விளங்கவும், நிறு வன சாம்பியனாகவும் மாநிலத்தை குழு  பாராட்டியது. பதிவு செய்யப்பட்ட 3,800  ஸ்டார்ட்அப்களைத் தவிர, கேரளாவில் பெண்கள் தலைமையிலான இருபதுக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன. நிறு வன ஆதரவு, சந்தை அணுகல், புத்தாக்கம்  - தொழில்முனைவோர் வளர்ப்பு, அடை காத்தல், வழிகாட்டுதல், நிதியுதவி ஆதரவு  மற்றும் நிர்வாகத் திறன் ஆகிய பிரிவு களில் குழு கேரளாவை மதிப்பீடு செய்தது.  நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் பெரும் அளவிலான வேலை வாய்ப்பு களை கருத்தில் கொண்டு நாட்டில் புதுமை  மற்றும் ஸ்டார்ட்அப்களை வளர்க்கும் நோக்கத்துடன் ஸ்டார்ட்அப் இந்தியா  2016 இல் இந்திய அரசால் உருவாக்கப் பட்டது.

;